Animal gives Different colour milk  Image Credits: Manithan
ஆரோக்கியம்

விதவிதமான நிறங்களில் பால் தரும் விலங்குகள் பற்றித் தெரியுமா?

நான்சி மலர்

னிதர்கள் நிறைய விலங்குகளை அது தரும் பாலுக்காகவே வளர்ப்பதுண்டு. ஆடு, மாடு, எருமை, கழுதை, ஒட்டகம் போன்ற விலங்குகளின் பாலில் எண்ணற்ற சத்துக்கள் இருக்கின்றன. பால் என்றதும் வெள்ளை நிறத்தில்தான் இருக்கும் என்றில்லை. பல விலங்குகள் விதவிதமான நிறங்களில் பால் தருகின்றன. அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

ஆட்டின் பால் வெண்மையான நிறத்தில் இருக்கும். பசுவின் பால் மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆட்டின் பாலில் இருக்கும் பீட்டா கரோட்டினை வைட்டமின் ஏ வாக மாற்றிவிடும். ஆனால், மாடு பீட்டா கரோட்டினை அப்படியே மாற்றாமல் வைத்திருப்பதால், பசும்பால் சற்று மஞ்சள் நிறமாகக் காட்சியளிக்கிறது.

Hippopotamus என்னும் விலங்கு பிங்க் நிறத்தில் பால் கொடுக்கிறது. இதற்குக் காரணம் இரண்டு ஆசிட்கள் ஆகும். Norhipposudoric acid and hipposudoric acid இந்த இரண்டு ஆசிட்களும் Hippopotamus மீது உருவாவதால்,  இது சன்ஸ்கிரீன் போன்று பயன்பட்டு அதன் சருமத்தை வெயிலில் இருந்து பாதுகாக்கிறது. இதுவே Hippopotamus ஸின் பால் பிங்க் நிறமாக இருப்பதற்குக் காரணம்.

ஒரு விலங்கின் பால் கருப்பு நிறத்தில் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? ஆப்பிரிக்க கருப்பு காண்டாமிருகத்தின் பால் கருப்பு நிறத்தில் இருக்கிறது. இந்த காண்டாமிருகத்தின் பாலில் 0.2 சதவிகிதம் மட்டுமே கொழுப்பு இருக்கிறது. காண்டாமிருகத்தின் பால் தண்ணீரை போன்று கருப்பு நிறத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காண்டாமிருகம் 5 வயது வரை மட்டுமே இனப்பெருக்கம் செய்யும். ஒருமுறை ஒரு குட்டியை மட்டுமே ஈன்றெடுக்கும்.

Guernsey பசுவின் பால் தங்க நிறத்தில் இருக்கும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? இந்த வகை பசுக்களின் பாலில் இருக்கும் பீட்டா கரோட்டின் சாதாரண பசுக்களிடம் இருப்பதை விட அதிகமாக இருக்கும். இந்த பீட்டா கரோட்டின் உடையாமல் அப்படியே பாலில் கலந்துவிடுவதால் பால் பார்ப்பதற்கு தங்க நிறமாக இருக்கிறது. மற்ற பசுக்களின் பாலை விட இந்தப் பசுவின் பாலில் Omega 3 மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. பீட்டா கரோட்டினின் பயன்கள், சருமத்தை பளபளப்பாக வைக்கிறது, கண் பார்வையை அதிகரிக்கிறது, இதயப் பிரச்னைகளை சரிசெய்ய உதவுகிறது.

உலகிலேயே விலை அதிகமாகக் கருதப்படும் பால், கழுதை பால்தான். இந்தப் பாலின் பற்றாக்குறையும், இந்தப் பாலில் உள்ள அதிக சத்துக்களுக்காகவும் விலை அதிகமாக இருந்தாலும், இந்த பாலை வாங்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT