ஆரோக்கியம்

குளுட்டன் அலர்ஜி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஜி.இந்திரா

ப்பாத்தி, பார்லி போன்றவற்றில், ‘குளுட்டன்’ எனும் ஒரு வகை புரதம் உள்ளது. இது சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். நம் உடலின் குடல் பகுதியில் முட்கள் போன்ற அமைப்புகள் உள்ளன. அதை வில்லை என்று கூறுவர். அது நாம் சாப்பிடும் உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சப் பயன்படுகிறது. குளுட்டன் அலர்ஜி ஏற்படுபவர்களுக்கு  இந்த முட்கள் போன்ற அமைப்பு முழுவதும் மடிந்து விடும். அப்படி இருக்கக்கூடிய நிலையில் உணவிலிருந்து சத்துக்கள் உறிஞ்சப்படுவது தடைபடும். இது, `சீலியாக்' (celiac) என்று கூறப்படுகிறது.

வயதான சிலருக்கு மட்டுமே இந்த புரதத்தை ஜீரணிக்க முடியாத தன்மை இருக்கும். அவர்கள் மட்டுமே குளுட்டன் ஃப்ரீ உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இவர்கள் குளுட்டன் உள்ள உணவுகளான சப்பாத்தி , பிரட், ரவை அல்லது சேமியா போன்ற உணவுகளை உண்ணும்போது வயிற்று வலி, அடிக்கடி மலம் கழிப்பது, நாள்பட்ட வயிற்றுப்போக்கு, அதீத சோர்வு, மலச்சிக்கல் போன்ற அறிகுறிகள் தெரிந்தால் அவர்கள், `உணவு சகிப்புத் தன்மை டெஸ்ட்' (உணவு இன்டாலரன்ஸ்) செய்துகொள்ள வேண்டும். அவர்கள் குறிப்பிட்ட இதுபோன்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

இந்தப் பிரச்னை ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படும். அதை நாம் மருத்துவ சிகிச்சை மூலம் கணித்து அதற்கான மருத்துவ நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் சப்பாத்தி, மைதா, பாஸ்தா போன்ற உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். அதேபோல், கேக் மற்றும் அசைவ பிரியர்கள் மொறு மொறு சிக்கன், மீன் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

மன அமைதி தரும் பாத்ரூம் - ஆய்வு கூறும் செய்தி! தவறுதலாக நினைக்க வேண்டாம்...

WhatsApp-ல் திருமண அழைப்பிதழ் வந்தால் தெரியாமல் கூட திறந்துடாதீங்க! 

ஆண்களின் Sperm Count அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

சோயா பனீர் பிரியாணி செய்யலாம் வாங்க! 

காஃபின் கலந்திருக்கும் காபி தெரியும்; ‘டீகாஃப்’ என்றால் என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT