Do you know about nutritious hemp seeds?
Do you know about nutritious hemp seeds? https://www.pothunalam.com
ஆரோக்கியம்

சத்துள்ள சணல் விதைகளைப் பற்றித் தெரியுமா?

ஜி.இந்திரா

ணல் விதைகள் என்பது வேகமாக வளரக்கூடிய பயிர்களில் ஒன்று. 10,000 ஆண்டுகளுக்கு முன்பு நார் திரிக்கப் பயன்படுத்தப்பட்ட பயிராக சணல் விளங்கியது. மேற்கு ஆப்பிரிக்காவில் பிரபலமான தாவரமாக இது திகழ்கிறது. வறண்ட மண் உள்ள நிலத்தில் சணல் விதைகள் பயிரிடப்படுகின்றன. இதில் சுமார் எட்டு அமினோ அமிலங்கள் உள்ளன. மேலும், புரத  தாதுச் சத்துக்கள் நிரம்பிய இது ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க உதவுகிறது.

சணல் விதையின் ஆரோக்கிய நன்மைகள்:

இதய ஆரோக்கியம்: உடலில் உள்ள கொலஸ்டிரால் அளவை சரியாக வைப்பதில் சணல் விதைகள் பெரிதும் உதவுகின்றன. கொலஸ்டிரால் கட்டுப்பாட்டால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. இத்துடன் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பெருந்தமனி தடிப்பு  போன்றவற்றையும் தடுக்க உதவுகிறது.

செரிமான ஆரோக்கியம்: கரையக்கூடிய மற்றும் கரையாத நார்சத்துக்கள் என இரண்டு வகைகள் இதில் உள்ளன. இந்த நார்சத்துக்கள் குடல் செயல்பாட்டைத் தூண்டி மலச்சிக்கலைத் தடுக்கிறது. மேலும். இந்த நார்ச்சத்துக்கள் பசியின்மையை ஏற்படுத்தி க்ளூகோஸ் உறிஞ்சுவதை குறைக்கிறது. உடல் கொழுப்பையும் குறைக்கிறது.

எடை இழப்பு: இதில் குறைந்த அளவிலான கலோரிகள் மற்றும் முழுமையான புரதம் உள்ளன. எனவே எடைக்குறைப்பில் மிகப் பயனுள்ளதாக உள்ளது. இவற்றின் புரதங்கள் வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துகின்றன. மேலும் இதன் நார்சத்துக்கள் ஊட்டச்சத்து உறிஞ்சுவதை  அதிகரித்து  பசியின்மையை ஏற்படுத்துகிறது.

ஹார்மோன் சமநிலை: சணல் விதைகளில் காமா லினோவெனிக் அமிலம் உள்ளது. இது தைராய்டு, கணையம் போன்றவற்றிற்கு ஹார்மோன் சீராக செயல்பட உதவுகிறது. மேலும், இது பதற்றம், மனச்சோர்வு, மாதவிடாய் போன்ற சமயங்களில் ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக ஏற்படும் பல்வேறு அறிகுறிகளை குறைக்க உதவுகிறது.

தூக்கமின்மை: சணல் விதைகளில் மக்னீசியம்  நிறைந்திருக்கிறது. சணல் விதைகள் உட்கொள்வதால். நிம்மதியான உறக்கம்  பெற முடியும்.

தாவர புரதம்: அனைத்து அமினோ அமிலங்கள் நிறைந்த ஒரே தாவர வகை உணவாக சணல் விதைகள் உள்ளன. இவை பால், முட்டை, மீனை விட முழுமையான புரதத்தைத் தருகிறது. மேலும், உடலால் உற்பத்தி செய்ய முடியாத எட்டு அத்தியாவசிய அமினோ அமிலங்களின் ஆற்றல்  மையமாக சணல் விதை திகழ்கிறது. இவை எடை இழப்பு, சகிப்புத் தன்மை, மன அழுத்தத்தைக் குறைப்பது, தசை வலிமை உள்ளிட்ட அனைத்திற்கும் உதவுகின்றன.

அழற்சி எதிர்ப்பு: இது இதயத்தை ஆரோக்கியமாக வைப்பதுடன், கீல் வாதத்தை போக்குகிறது. இது புற்றுநோயைத் தடுக்கும் வல்லமை படைத்தது.

சரும ஆரோக்கியம்: இதில் உள்ள பொருட்கள் முகத்தில் எண்ணெய் சேர்ப்பதைத் கட்டுப்படுத்துகின்றன. சருமத்தில் ஏற்படும் வீக்கம், முகம் சிவத்தல் போன்றவை தடுக்கப்படுகிறது.

பெட்ரோல் பங்கில் கட்டாயம் இருக்க வேண்டிய வசதிகள்... இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

RCB Vs CSK: பெங்களூரு அணியே வெற்றிபெறும் – பிரையன் லாராவின் கணிப்பு!

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் 15 உணவுகள்!

சிறப்பான நாள் அமைவதற்கு காலையில் பின்பற்ற வேண்டிய 5 வழிமுறைகள்!

“கடன அடைக்கதா இந்த படம்” – ‘இங்கு நான் தான் கிங்கு’ படம் பற்றி சந்தானம்!

SCROLL FOR NEXT