முந்திரிப் பருப்பு https://tamil.boldsky.com
ஆரோக்கியம்

தைராய்டு சுரப்பிகளின் செயல்பாட்டை அதிகரிக்கும் நான்கு பொருட்கள் தெரியுமா?

பொ.பாலாஜிகணேஷ்

தைராய்டு என்பது சர்க்கரை வியாதி போல் இதுவும் பரவலாக மக்களிடம் அதிக அளவில் உள்ளது. சுரப்பியின் செயல்பாட்டைப் பாதிக்கும் பல காரணிகள் உள்ளன. தைராய்டு நோயைக் கட்டுப்படுத்த, பழங்கள் மற்றும் காய்கறிகள், பீன்ஸ், பருப்பு வகைகள், மீன், முட்டை மற்றும் இறைச்சி ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இதைத் தவிர்த்து உலர் பழங்களில் தைராய்டு செயல்பாட்டிற்கு உதவும் செலினியம் உள்ளது. இவற்றைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டாலும் தைராய்டு சுரப்பிகளின் செயல்பாட்டை அதிகரிக்க முடியும்.

முந்திரிப் பருப்பு: முந்திரிப் பருப்பில் செலினியம் என்ற தாதுச்சத்து அதிகம் உள்ளது. இது தைராய்டு செயல்பாட்டை உறுதி செய்வதிலும், தைராய்டு அளவை ஒழுங்குபடுத்துவதிலும் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திற்கு எதிராக தைராய்டு திசுக்களைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. 4 முதல் 5 முந்திரிப் பருப்பை ஊற வைத்து இரவில் சாப்பிட்டு வருவது நல்லது.

தேங்காய்: தேங்காயில் அதிகளவு நடுத்தர சங்கிலி கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது வளர்சிதை மாற்றம் மற்றும் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது.

தேங்காய்

மேலும், இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது. தினமும் தேங்காய் துண்டுகளைச் இரவில் சாப்பிட்டு வந்தால் தைராய்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

வறுத்த பூசணி விதை: பூசணி விதைகளில் அதிகளவு துத்தநாக சத்து உள்ளது. இது தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், பூசணி விதைகளில் உள்ள டிரிப்டோபானின், தூக்கத்தை ஊக்குவிக்கும் அமீனோ அமிலமாகும்.

வறுத்த பூசணி விதை

வறுத்த பூசணி விதைகளை தினமும் உட்கொண்டு வந்தால் ஆழ்ந்த உறக்கத்தை அளித்து தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. வறுத்த பூசணி விதைகளை இரவில் சாப்பிட்டு வருவது நல்லது.

சியா விதைகள்

சியா விதைகள்: சியா விதைகளில் ஒமேகா3 அதிகம் உள்ளது. பொதுவாக, ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இவை தைராய்டு சுரப்பி தொடர்பான நிலைமைகளான ஹாஷிமோட்டோவின் தைராய்டிடிஸ், டிகுவெர்வின் தைராய்டிடிஸ் அல்லது தைராய்டின் பிற வீக்கத்தை குறைக்கும். இதனால் சிறிதளவு சியா விதைகளைத் தினமும் ஊறவைத்து இரவில் சாப்பிடுவது நல்லது.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT