Do you know the benefits of putting oil on the belly button at night? Image Credits: News9live
ஆரோக்கியம்

தொப்புளில் எண்ணெய் வைப்பதால் ஏற்படும் பலன்கள் என்னென்ன தெரியுமா?

நான்சி மலர்

யுர்வேத முறைப்படி Navel chakras or swadhisthanaல் அதிகப்படியான சக்தியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதுவே உயிர்களின் ஆரம்பமாகக் கருதப்படுகிறது. தினமும் இரவு தூங்குவதற்கு முன் தொப்புளில் எண்ணெய் வைப்பதால், நிறைய பலன்கள் கிடைக்கின்றன. அவை குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

வயிற்று வலியை போக்கும்: விளக்கெண்ணெய்யால் வயிற்றுப் பகுதியை மசாஜ் செய்வதால் ஜீரணக் கோளாறால் ஏற்படும் வலி, மாதவிடாய் வலி போன்றவற்றை சரிசெய்கிறது. நம்முடைய உடலின் நடுப்பகுதியாக தொப்புளே இருக்கிறது. இந்தப் பகுதியில் எண்ணெய் தடவி மசாஜ் செய்வதால் இரத்த ஓட்டம் அதிகரித்து வயிற்று வலி நீங்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: தொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. தொப்புள் பகுதியில் முக்கியமான பல நரம்புகள் செல்கின்றன. அதனால் இதில் எண்ணெய் விட்டு மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை அதிகரிப்பது மட்டுமில்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியையும் உடலில் அதிகரிக்கிறது.

ஜீரணத்திற்கு உதவுகிறது: தொப்புள் மற்றும் தொப்புளைச் சுற்றியுள்ள இடங்களில் எண்ணெய் மசாஜ் செய்வதன் மூலம் ஜீரண சக்தி அதிகரிக்கும். விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்துவது ஜீரண சக்தியை அதிகரிக்கும், வயிற்றில் ஏற்படும் உப்புசத்தை போக்குகிறது.

மாதவிடாய் வலிகளைப் போக்கும்: பெண்களின் தொப்புள் Uterusல் Umbilical cord மூலமாக இணைக்கப்பட்டிருக்கிறது. நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்யால் மசாஜ் செய்யும்போது Uterusல் இரத்த ஓட்டத்தை அதிகரித்து மாதவிடாயின்போது வரும் வயிற்றுவலியை குறைக்க உதவுகிறது.

ஸ்ட்ரெஸ் மற்றும் பதற்றத்தைப் போக்கும்: தொப்புளில் எண்ணெய் தடவி மசாஜ் செய்வதால், ரிலாக்சாக இருப்பது மட்டுமில்லாமல், பதற்றம் மற்றும் ஸ்ட்ரெஸ் குறைகிறது. ஏனெனில், தொப்புள் Vagus nerve என்னும் நரம்புடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இதுவே அமைதியாக, ரிலாக்சாக இருப்பதற்கான நரம்புகளை கட்டுப்படுத்துகிறது. Lavender oil and chamomile oil ஆகிய எண்ணெய்களை தொப்புளில் தடவுவதன் மூலம் மன அமைதியை தந்து ஸ்ட்ரெஸ் மற்றும் பதற்றத்தைப் போக்கும்.

பெண்களுக்கு கருவுறுதலை அதிகரிக்கும்: தொப்புள் கர்ப்பப்பையுடன் நரம்புகள் மூலமாக  இணைந்திருப்பதால், தொப்புளில் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் பயன்படுத்தும்போது அது பெண்களுக்கு கருவுறுதலை அதிகரிக்கும்.

சருமத்தை பளபளப்பாக்கும்: தொப்புள் இரத்தக் குழாய்களுடன் இணைந்திருப்பதால், இங்கு எண்ணெய் தடவும்போது சருமத்திற்கான இரத்த ஓட்டம், சரும பளபளப்பு போன்றவற்றை தரும். இது சரும நோய்களான Acne, psoriasis, eczema போன்றவற்றை குணப்படுத்துகிறது.

தூக்கமின்மையை குணப்படுத்தும்: இந்த ஆயுர்வேத முறையை தொப்புளில் செய்வதால், அது தூக்கத்தை அதிகரிக்கிறது. ஏனெனில், ரிலாக்சாக இருக்கக்கூடிய ஹார்மோனை உற்பத்திச் செய்து நல்ல தூக்கத்தை கொடுக்கிறது.

முடி வளர்ச்சிக்கு உதவுகிறது: தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெய்யை தொப்புளில் வைப்பதன் மூலம் தலைமுடி வேர்களின் வளர்ச்சியை அதிகரிக்கும். இதனால் ஆரோக்கியமான மற்றும் வலிமையான தலைமுடி வளரும்.

Wow… Wow… செஸ்வான் நூடுல்ஸ் ரெசிபி! 

பணப்பயிர் சணலின் பயன்பாடுகள் தெரியுமா?

உடலில் மாயாஜாலம் செய்யும் வெண்டைக்காய் நீரின் 5 பலன்கள்!

விவாகரத்து பெற்ற பின்னர் அதை வாபஸ் பெறலாமா? சட்டம் என்ன சொல்கிறது? 

Trisha's Beauty secrets: நடிகை த்ரிஷா அழகின் ரகசியம்!

SCROLL FOR NEXT