காது குத்துதல் என்பது நமது மரபில் தோன்றிய பாரம்பரிய சடங்கு. ஆன்மிக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் இதில் பல நன்மைகள் உள்ளன. இது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
காதில் கம்மல் அணியும் பகுதியில் உள்ள மெரிடியன் புள்ளி மூளையில் உள்ள இடது எம்மிஸ்பியர் பக்கத்தை, வலது பக்கத்தோடு இணைப்பதற்கு உதவுகிறது. அந்த இடத்தில் துளை இடுவதால் மூளையின் செயல் திறனும், நினைவாற்றலும் அதிகரிக்கிறது. இதனாலேயே நம் வழக்கத்தில் சிறு வயதிலேயே வளரும் குழந்தைகளுக்குக் காது குத்துகிறோம்.
காது குத்துவதன் மூலம் ஆற்றல் சரிசமமாக உடல் முழுவதும் பரவுகிறது. இடது காதில் உள்ள புள்ளி தூண்டப்படுவதன் மூலம் உடலில் ஏற்படும் வலிகள் குறையும். குழந்தை பிறப்பின் போது பெண்களுக்கு ஏற்படும் வலியை பெருமளவு இது குறைக்கிறதாம். பசியைத் தூண்டும் புள்ளிகள் காதில் உள்ளதால் செரிமானத்தின் செயல்பாடுகள் தூண்டப்பட்டு, அதன் இயக்கம் சிறப்பாக இருக்கும்.
காது குத்துவதால் ஒட்டு மொத்த உடலின் உயிர்ச்சக்தி மேம்படுகிறது. காது மடலில் கண் பார்வையின் இணைப்புப் புள்ளி இருக்கிறது. அந்த இடத்தில் காது குத்துவதால் பார்வைத் திறன் மேம்படுகிறது. காது குத்துவதால் உடலின் இரத்த ஓட்டம் சீராக பராமரிக்கப்படுகிறது. இதனால் மூளைக்கு சரியான அளவில் இரத்தம் செல்கிறது. மன ஆற்றல் மற்றும் மன திடத்தை காது குத்துவது காக்கிறது. ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகிறது. காது குத்துவது காதின் கேட்கும் திறனை மேம்படுத்துகிறது. அது மட்டுமின்றி, பதற்றம் மற்றும் மனக் கவலையை கட்டுப்படுத்தி, மன ஆரோக்கியத்தையும் காது குத்துவது மேம்படுத்துகிறது.