தலைக்குக் குளிக்கப் பயன்படுத்தும் ஷாம்பூகளில் அதிகப்படியான ரசாயனம் சேர்க்கப்படுவதால், அதைப் பயன்படுத்தும் பொழுது முடி கொட்டுதல், முடி வறண்டு போதல் போன்ற பிரச்னைகள் வருகின்றன. இதற்காகத்தான் நாம் பாரம்பரியமான பயன்படுத்தக்கூடிய சீயக்காய் பொடியை முடிக்குப் பயன்படுத்த வேண்டியது அவசியமாகும். சீயக்காய், வெந்தயம், கருவேப்பிலை, நெல்லிக்காய், செம்பருத்தி, கற்றாழை போன்ற இயற்கை பொருட்களை வைத்துத் தயாரிக்கப்படும் பாரம்பரியமான சீயக்காய் பொடி முடி வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. சீயக்காய் பயன்படுத்துவதால், வேறு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. சீயக்காயில் அதிக அளவில் Saponins, வைட்டமின், ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இது முடி பளபளப்பாக இருக்க உதவுகிறது. மேலும், இதை தலையில் தேய்க்கும்போது குறைவான நுரையே வரும். இதனால் முடியின் தரம் மேம்பட உதவுகிறது.
2. ஆரோக்கியமற்ற வறண்ட உச்சந்தலையால் முடி வளர்ச்சி பாதிக்கக்கூடும். சீயக்காய் Cooling agent ஆக செயலாற்றி தலையில் உள்ள எண்ணெய்யின் உற்பத்தியை அதிகரிப்பதால் வறண்ட உச்சந்தலை சரியாக உதவுகிறது. தலையில் உள்ள அரிப்பு, வீக்கம் போன்றவையும் குணமாகிறது.
3. சீயக்காயில் Anti fungal குணம் உள்ளதால், பொடுகுப் பிரச்னையை போக்கி முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
4. சீயக்காயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் முடியை பாதிக்கும் ப்ரீரேடிக்கல்ஸை அழிக்கிறது. இதில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, வைட்டமின் கே இருப்பதால் முடி வளர்வதற்கு உதவுகிறது.
5. சீயக்காய் பயன்படுத்துவதால், முடியில் விழும் சிக்குகளை குறைத்து முடி கொட்டுதல், முடி உடைதல் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.
6. தலையில் உள்ள Sebum secretionஐ அதிகரிப்பதால், மாய்ஸ்டரைசராக செயல்பட்டு தலைமுடி வெடிப்பை போக்க உதவுகிறது.
7. ஷாம்பு, சீரம் போன்ற ரசாயனப் பொருட்களை தலைக்கு பயன்படுத்துவதால் நரை முடி ஏற்படுகிறது. சீயக்காயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் நரை முடியை Reverse செய்ய உதவுகிறது.
8. தலையில் பேன்கள் இருந்தால் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே, பேன்களை ஒழிக்க வேண்டும் என்று எண்ணினால் கட்டாயம் சீயக்காய் பயன்படுத்தவும்.
9. சோப்பு அல்லது ஷாம்பூவில் உள்ளது போல எந்த ரசாயனப் பொருட்களும் சீயக்காயில் கிடையாது. இது இயற்கையான Hair cleanser ஆக செயல்பட்டு தலைமுடியில் உள்ள அழுக்கு, தூசு போன்றவற்றை நீக்கி இயற்கையான எண்ணெய்யை தலையில் தக்க வைக்க உதவுகிறது.
10. சீயக்காயில் Anti fungal மற்றும் anti microbial குணங்கள் உள்ளன. இது சொரியாசிஸ், பொடுகு, அரிப்பு, வீக்கம், பேன் தொல்லை ஆகியவற்றை போக்கி ஆரோக்கியமாக தலைமுடி வளர உதவி செய்கிறது.