Do you know the greatness hidden in tapioca? https://www.thamizhkadal.com
ஆரோக்கியம்

மரவள்ளிக் கிழங்கில் மறைந்திருக்கும் மகத்துவம் தெரியுமா?

கே.எஸ்.கிருஷ்ணவேனி

ப்பங்கிழங்கு எனப்படும் மரவள்ளிக்கிழங்கு நம் நாட்டில் பரவலாக மலைப்பாங்கான இடங்கள் மற்றும் வறண்ட நிலப் பகுதிகளில் விளையும் ஒரு சத்தான உணவுப் பொருளாகும். அமேசானை பிறப்பிடமாகக் கொண்ட மரவள்ளிக்கிழங்கு இந்தியாவில் 17ம் நூற்றாண்டில் கேரளாவில் போர்த்துகீசியர்களால் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் மிகுந்துள்ளன.

மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் மாவுப்பொருள்தான் ஜவ்வரிசி. இதில் உப்புமா, கஞ்சி, பாயசம் போன்றவை செய்து உண்ணலாம். மரவள்ளிக் கிழங்கை வேகவைத்து கடைந்து பொரியலாகவும், உலர்த்தி அரைத்து மாவாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்தக் கிழங்கை மெல்லிய சீவல்களாக வட்ட வட்டமாக சீவி எண்ணெயில் பொரித்து உப்பு, காரம் தூவி சிப்ஸ் போல் சாப்பிடுவதும் உண்டு. ஜவ்வரிசி வடகம், அப்பளங்கள் மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. மேலும், உணவு மற்றும் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளில் மரவள்ளிக்கிழங்கு மாவை பயன்படுத்தி திரவ குளுக்கோஸ் மற்றும் டெக்ஸ்ட்ரோஸ் உற்பத்தி செய்யப்படுகிறது.

காகிதத் தொழிற்சாலைகளில் இந்தக் கிழங்கின் மாவு பயன்படுத்தப்படுகிறது. ஜவுளி தொழில்களிலும் துணிகளுக்கு மொடமொடப்பைத் தருவதற்கு இது பயன்படுகிறது. கோந்து மற்றும் சலவைக்கஞ்சி தயாரிக்கவும் மரவள்ளிக்கிழங்கு மாவு பயன்படுத்தப்படுகிறது.

இந்தக் கிழங்கில் வைட்டமின் பி17 இருப்பது புற்றுநோய் நிவாரணத்திற்கு மிக முக்கியப் பங்காற்றுகிறது எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்திற்கு நல்லது. இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைத்து மெட்டபாலிசம் எனப்படும் உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கும். இரத்த சிவப்பணுக்களை அதிகரித்து இரத்த ஓட்டத்தை சீராக்கி இரத்தத்தில் கலந்துள்ள நச்சுக் கொழுப்புகளை கரைக்கும்.

நடுத்தர வயதினர் வாரம் இருமுறை மரவள்ளிக்கிழங்கை சாப்பிட்டு வர எலும்புகளின் உறுதி அதிகரிக்கும். ஞாபக மறதி வியாதியை குணப்படுத்தும். உடலில் நீரின் அளவை சரியாக்கும். மரவள்ளிக்கிழங்கு கொழுப்பு இல்லாதது என்பதால் ஆரோக்கியமான வழியில் உடல் எடையை கூட்ட உதவும். அத்துடன் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்திருப்பதால் வயிற்றுப் போக்கை குணப்படுத்தும்.

மரவள்ளிக் கிழங்கை வேகவைத்து சாப்பிடுவதால் உடலுக்கு தினசரி தேவைப்படும் வைட்டமின் மற்றும் மினரல்கள் கிடைக்கின்றன. கண் பார்வையை மேம்படுத்த உதவும் வைட்டமின் ஏ இந்தக் கிழங்கில் அதிகம் உள்ளது. ஊட்டச்சத்து நிறைந்த இந்தக் கிழங்கை உணவில் சேர்த்து அனைவரும் பயன்பெறுவோம்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT