கோஜி பெரி (Goji Beri) ஆசியாவைப் பிறப்பிடமாகக் கொண்டது. சீனாவில் அதிகளவில் பயிரிடப்பட்டு பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது கோஜி பெரி. நல்ல இனிப்பு சுவை கொண்டது இப்பழம். சீனா, ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளின் பாரம்பரிய மருந்துகளின் தயாரிப்பில் பல நூற்றாண்டுகளாக கோஜி பெரி ஒரு கூட்டுப் பொருளாக சேர்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்தப் பழத்தில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கோஜி பெரியை அப்படியே பச்சையாகவும், சமைத்தும், உலர் பழமாகவும் சாப்பிடலாம். பொதுவாக, மூலிகை டீயின் தயாரிப்பில் சேர்த்தும், ஜூஸாக தயாரித்தும் அருந்தலாம். கோஜி பெரி ஜூஸ் நம் உடலின் சக்தியின் அளவை உயர்த்தவும், மன நிலையை மகிழ்ச்சியுடன் வைக்கவும் செய்யும். கோஜி பெரியில் வைட்டமின் C, A மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளன. கோஜி பெரி ஜூஸ் அருந்துவதால் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும், இது உடலில் உள்ள தீங்கிழைக்கும் ஃபிரீரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி உடலின் வீக்கங்களைக் குறைக்க உதவும்.
கோஜி பெரி உடலில் தோன்றும் கேன்சர் செல்களை எதிர்த்துப் போராடி கேன்சர் கட்டிகள் உருவாகி வளர்வதைத் தடுக்கும். கேன்சரை குணப்படுத்துவதற்கும் இது சிறந்த முறையில் உதவி புரியும். இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கல்லீரலில், மது அருந்துவதால் உண்டாகும் கோளாறுகளை நீக்கி நோய் தாக்குதலிலிருந்து கல்லீரலைப் பாதுகாக்கும்.
ஆரோக்கியமான சருமம் பெறவும் கோஜி பெரி ஜூஸ் உதவும். சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர்வீச்சின் காரணமாக சருமத்தில் சிதைவு ஏற்படாமல் பாதுகாக்கவும் கோஜி பெரி உதவும். இதிலுள்ள அதிகளவு ஆரோக்கியமான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், குறிப்பாக சியாக்சாந்தின் (Zeaxanthin), வயது முதிர்ச்சியின் காரணமாக உண்டாகும் பார்வைத் திறன் குறைபாட்டை நீக்கி கண்களை ஒளிரச் செய்யும் குணம் கொண்டது. மனதிலுள்ள கவலைகள், மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை பிரச்னையோடு சம்பந்தப்பட்ட பிற கோளாறுகளை களையவும் கோஜி பெரி உதவும். இப்பழத்திற்கு உல்ஃப் பெரி (Wolf Beri) என்று மற்றொரு பெயரும் உண்டு.
இத்தனை நன்மைகள் தரக்கூடிய கோஜி பெரியை அனைவரும் உட்கொண்டு உடல் ஆரோக்கியம் பெறுவோமே!