Do you know the health benefits of tomatoes?
Do you know the health benefits of tomatoes? https://tamil.oneindia.com
ஆரோக்கியம்

விண்ணுலக ஆப்பிளின் நன்மைகள் எவ்வளவு தெரியுமா?

இந்திராணி தங்கவேல்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பழங்களில் சமையலில் முக்கியத்துவம் வாய்ந்தது தக்காளிப் பழம் ஆகும். தக்காளி இன்றி ஒரு சமையலும் ஆகாது என்று கூறலாம். அந்த அளவிற்கு சமையலில் பெரும்பங்கு வகிப்பது தக்காளிப் பழம். இதன் அருமை பெருமைகளை இந்தப் பதிவில் காண்போம்!

தக்காளியை கண்டுபிடித்தவர்கள் ஸ்பானியர்கள். இவர்கள்தான் இதை முதன் முதலாக உணவுப் பொருளாக ஏற்றுக்கொண்டனர். போர்த்துக்கீசிய பண்டம் என்றும், காதல் ஆப்பிள் என்றும் பிரஞ்சு நாட்டினர் சிறப்பித்துக் கூறும் அளவுக்கு பெருமை பெற்றது தக்காளி. இன்னும் சொல்லப்போனால் விண்ணுலக ஆப்பிள் என்ற சிறப்புப் பெயரும் இதற்கு உண்டு.

வைட்டமின் ஏ வும் பி காம்ப்ளக்ஸும் நிறைந்து காணப்படும் இந்தப் பழத்தில் வைட்டமின் சி க்கும் பஞ்சமில்லை. நமது நரம்புகளுக்கும் எலும்புகளுக்கும் வலுவூட்டி நம்மை திடகாத்திரமாக வாழ வைப்பதற்கு உதவும் தக்காளி பழத்தால் உடல் திசுக்களும் செல்களுக்கும் கூட வலு பெறுகின்றன.

சத்துக்கள் நிறைந்தது: தக்காளி பழத்தில் சுண்ணாம்புச் சத்து நிறைய உள்ளதால் எலும்புகளுக்கு நல்ல வலிமை கிடைக்கிறது. இரத்த விருத்திக்குத் தேவைப்படும் இரும்புச்சத்து மற்றும் செம்புச் சத்து போன்றவையும் இதில் நிறைய உள்ளதால் இது முழு சக்தி நிறைந்த பழமாகத் திகழ்கிறது. புரதம், கொழுப்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்து, மெக்னீசியம், அயன், சோடியம், செம்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, வைட்டமின் பி12, p6 மற்றும் சி என்று இந்தப் பழத்தில் உள்ள உயிர் சத்துக்களை அடுக்கிக்கொண்டே போகலாம். வைட்டமின் சி, போலிக் அமிலம், பொட்டாசியம், பீட்டா கரோட்டின், காமா கரோட்டின் மற்றும் தாவரச் சத்துப் பொருட்களும் தக்காளியில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

குழந்தைப் பருவத்திலிருந்தே, அதாவது மூன்று மாதத்தில் இருந்தே தக்காளிப் பழ ரசத்தை கொடுத்து வருவதன் மூலம் நல்ல வளர்ச்சியும் வலிமையும் பெற்றுத் திகழலாம். உயிர் சத்துக்கள் அனைத்தும் அதிவிரைவில் இரத்தத்துடன் கலந்து விடுவதும், சூடாக்கிய பின்னரும் உயிர் சத்துக்கள் அழியாமல் இருப்பதும்தான் தக்காளிப் பழத்தின் சிறப்பாகும்.

சூப்புகளுக்கெல்லாம் ராணி என்றால் அது தக்காளி சூப்புதான். உடல் நலம் குன்றி நலம் பெற்று வருபவர்களுக்கு முதன்முதலாக தக்காளி சூப்பைத்தான் பரிந்துரைப்பார்கள்.

தக்காளி பழத்தின் பயன்கள்:

* முற்றிப் பழுத்த பழங்கள் நன்றாக சிவந்து காணப்படும். அவற்றைத்தான் பயன்படுத்த வேண்டும். வெளிரிக் காணப்படும் பழங்களை போதிய ஊட்டச்சத்து இல்லாதவை என்று ஒதுக்கி வைத்து விட வேண்டும்.

* தக்காளியை அடிக்கடி உணவில் சேர்த்து வருவதன் மூலம் நிச்சயமாக முதுமையை தள்ளிப்போடுவதோடு, என்றும் இளமையுடன் திகழலாம். புற்றுநோய் வராமல் தடை செய்வதற்கு தக்காளி பெரும் துணை புரிகிறது.

Tomato soup

* நமது உடம்பில் முதுமை தோன்றுவதற்கு காரணம் நமது சருமம் சுருங்குவதுதான். இந்த சுருக்கத்தை வர விடாமல் என்றும் இளமை பொலிவுடன் திகழ்வதற்கு தக்காளி பழம் பெரிதும் துணை புரிகிறது.

* மலக்குடல் சம்பந்தமாக ஏற்படும் தொல்லைகளை தக்காளி பழம் தீர்த்து வைக்கிறது.

* இரத்தம் மற்றும் குடல் பகுதியை சுத்தம் செய்யவும் தக்காளி பேருதவி புரிகிறது.

* மூளை உழைப்பு நிறைய உள்ளவர்களும், சதைப்பிடிப்பற்றவர்களும் இந்தப் பழத்தை நிறைய உபயோகித்து பயன் பெறலாம்.

* இருதய நோயாளிகளுக்கு இந்தப் பழம் அருமருந்தாகிறது. எனவே, அவர்கள் நன்கு கனிந்த தக்காளி பழங்களை பச்சையாகவே உண்டு பயன் பெறலாம்.

* சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் ஆற்றலையும் தக்காளி பழத்தின் சாறு கொண்டுள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கும் இந்த பழம் நல்ல மருந்தாகிறது. ஒவ்வொருவரும் நன்கு கனிந்த இரண்டு தக்காளி பழங்களை தினமும் உட்கொள்வதால் பொட்டாசியம் சத்துக் குறைவை நிவர்த்தி செய்து விடலாம். இவ்விதம் பொட்டாசியம் கிடைப்பதால் உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு பக்கவாதம் ஏற்படாமல் அவர்களைக் காப்பாற்றி விடலாம்.

* சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் தக்காளி பழங்கள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

* பாசிப்பருப்புடன் தக்காளி பழத்தை கலந்து தினசரி சாப்பாட்டுடன் சேர்த்து வந்தால் கண் பார்வை தெளிவு பெறும். பலவீனம், சோம்பல் இவற்றை நீக்கி சுறுசுறுப்பைத் தருகிறது. இருதய சம்பந்தமான நோய்களை தக்காளி பழம் தீர்த்து வைக்கிறது.

* தக்காளி பழம் சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குள் ஜீரணமாகி விடும். அதனால் ஜீரண சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் பெரியவர்களுக்கும் கூட நல்ல புஸ்டியான சிறந்த உணவாக தக்காளி பழம் விளங்குகிறது.

இவ்வளவு பயன்களை தன்னகத்தே அடக்கி உள்ள தக்காளி பழத்தை, ‘விண்ணுலக ஆப்பிள்’ என்று கூறுவது சாலப்பொருத்தம் இல்லையா? விதவிதமாக அதைப் பயன்படுத்தி உணவு சமைத்து சாப்பிட்டு ஆரோக்கியம் காப்போமே!

கொன்றை பூவின் ஆரோக்கிய மகத்துவம் தெரியுமா?

உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?

Remote Work: தொழில்நுட்பமும், தொலைதூர வேலைகளும்! இதுதான் எதிர்காலமா? 

18 முறை படையெடுத்தும் 6 முறை தரைமட்டமாகியும் மீண்டெழுந்த ஆலயம்!

Managing Debts: சாமானியர்களுக்கான கடன் நிர்வாக யுக்திகள்! 

SCROLL FOR NEXT