ஆரோக்கியம்

கை, பாத, வாய் நோய் என்றால் என்ன தெரியுமா?

தி.ரா.ரவி

கை, பாத, வாய் நோய் (Hand, foot, mouth disease) என்பது ஒரு வகை (COXSACKIE A 16)   வைரசால் ஏற்படும் தொற்று ஆகும். மழைக்காலத்தில்தான் இந்தத் தொற்றின் தாக்கம் அதிகம் இருக்கும். பிறந்த குழந்தை முதல் 16 வயதுள்ள சிறுவர், சிறுமியரை  அதிகமாகத் தாக்குகிறது. அவர்கள் மூலமாக வீட்டிலுள்ள பெரியவர்களையும் இது தாக்குகிறது. உள்ளங்கை,  உள்ளங்கால்கள் மற்றும் உதட்டிலும்,  நாக்கிலும்  சிவப்பான கொப்புளங்கள் போல தோன்றும். முழங்கால் , முழங்கைப் பகுதிகளில் கூட சிவந்த கொப்புளங்களாகக் காணப்படும். இந்தத் தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்கு வலியின் காரணமாக காய்ச்சலும் கூட வரலாம்.

இந்நோய் ஏன் வருகிறது?: பாலர் பள்ளிகள், க்ரஷ்கள், கோடைக்கால முகாம்கள் மற்றும் சிறு பிள்ளைகள் நெருக்கமாக இருக்கும் இடங்களில் 7 வயதுக்குட்பட்ட குழந்தைகளைத் தாக்குகிறது இந்த நோய். அசுத்தமான கைகளால் அவர்கள் கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடுவதே இந்தத் தொற்று தோன்றக் காரணம். இருமும்போது மற்றும் தும்மும்போதும் இந்நோய் மற்ற பிள்ளைகளுக்குப் பரவலாம். இந்த நோய் பொதுவாக 7 முதல் 10 நாட்களுக்குள் முற்றிலும் மறைந்து விடும்.

வராமல் தடுக்க: வெளியில் செல்லும்போது எப்போதும் வீட்டில் இருந்து பிள்ளைகளுக்கு தண்ணீர் பாட்டில் கொடுத்து விடவும். குழந்தைகளை சாக்லேட் கவர், ஐஸ் கிரீம் கப் மூடியை உள்பக்கமாக நாக்கால் சுவைப்பது போன்ற செயல்களை செய்ய விடாமல்  தடுப்பது  நலம்.

பிள்ளையின் மூக்கைத் துடைத்த பிறகு, டயாப்பரை மாற்றிய பின், கழிவறையை உபயோகித்த பின், பெரியவர்கள் கைகளை சோப்புப் போட்டு சுத்தமாக கழுவ வேண்டும். அவர்களின் பால் பாட்டிலை வெந்நீரில் கழுவுவது, பொம்மைகளை முறையாக  சானிடைஸ் செய்வது முக்கியம். இந்தத் தொற்று பாதித்த பிள்ளைகளை ஒரு வாரம் பள்ளி மற்றும் கல்லூரிக்கு அனுப்பக்கூடாது. இதனால் மற்ற பிள்ளைகளுக்கும் இந்நோய் பரவாமல் தடுக்கலாம்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT