Cardio pulmonary Resuscitation என்பது கார்டியோ என்றால் இதயம், பல்மோனரி என்றால் நுரையீரல் சம்பந்தப்பட்டது, ரெசூசிடேஷன் என்பது உயிர்ப்பித்தல் என்று பொருள். CPR என்பது உயிர் காக்கும் செயல்முறையாகும். மாரடைப்பு போன்ற சமயங்களில் இதயத்தை இயங்க வைக்க உதவும் முறையாகும்.
மூச்சுத் திணறல், தண்ணீரில் மூழ்குதல், மின்சாரம் தாக்குதல் போன்ற சமயங்களில் அதிர்ச்சியில் இதயம் நின்று போகக்கூடும். அச்சமயம் இதயத்தை உயிர்ப்பிக்க பயன்படுத்தப்படும் செயல்முறை இதுவாகும்.
கார்டியோ பல்மோனரி ரெசூசிடேஷன் (CPR) என்பது அவசர காலத்தில் மார்பை அழுத்தி செய்யப்படும் செயல்முறையாகும். வாயோடு வாய் வைத்து காற்றை செலுத்துவதால், மூளை செயல்பட்டு உடலிலே இரத்த ஓட்டம் அதிகரித்து மாரடைப்பு ஏற்பட்டவர்கள் இதயத்துடிப்பு திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதுபோன்ற செயல்முறை மூச்சு விட திணறுபவருக்கும் மற்றும் மூச்சு நின்று போனவர்களுக்கு மட்டுமே செய்யப்படும். இந்த செயல்முறையால் திசுக்கள் இறப்பது மற்றும் மூளை சேதமடைவதை தடுக்கலாம்.
பெரியவர்களுக்கு 5 செ.மீ. முதல் 6 செ.மீ. அழுத்தும் ஆழம் இருக்க வேண்டும். ஒரு நிமிடத்திற்கு 100 முதல் 120 அழுத்தம் தர வேண்டும். மீட்பாளர் சிபிஆர் செய்யும் நபருக்கு செயற்கையான சுவாசம் தர வேண்டும். இதில் வாயோடு வாய் வைத்து காற்றை உள்ளே செலுத்துதல் அல்லது காற்றை அந்த நபரின் நுரையீரலுக்கும் செலுத்தும் கருவியை பயன்படுத்துவது என இரண்டு விதம் உண்டு.
சிபிஆர் (CPR) என்பது இதயத்தை மறுபடியும் உயிர்பிப்பது மட்டுமல்லாமல், இதயத்திற்கும் மூளைக்கும் இரத்த ஓட்டத்தை மீண்டும் மீட்டமைப்பதாகும். சிபிஆர் தொடர்ந்து ஒருவருடைய இதயத் துடிப்பு திரும்பும் வரை செய்யப்படும் அல்லது இறந்ததாக அறிவிக்கப்படும்.
இதை மருத்துவர்கள், தீயணைப்பு வீரர்கள், உயிர்க்காப்பாளர் மற்றும் சிபிஆர் செய்வதற்கு பயற்சி பெற்றவர்கள் ஆகியோர் செய்யலாம். CPR செய்வதற்கு எந்த உபகரணங்களும் தேவையில்லை. சிபிஆர் செய்வதற்கு முன்பு அந்த நபர் சரியான நிலையில்தான் இருக்கிறாரா என்று முதலில் பார்க்க வேண்டும். சிபிஆர் செய்யப்படும் நபரை மிருதுவான மெத்தை மீது படுக்க வைப்பது நல்லது. சிபிஆர் செய்யப்போகும் நபர் உயரமான இடத்தில் இருப்பது சிபிஆர் செய்வதற்கு வசதியாக இருக்கும். நோயாளிக்கு நாடி மற்றும் இதயத்துடிப்பு இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
30 முறை மார்பில் அழுத்திய பிறகு இரண்டு முறை மூச்சுக்காற்றை கொடுக்கவும். நோயாளி திரும்பவும் சுயநினைவுக்கு வரும் வரை இதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். அழுத்துதல் (Compression) வேகமாகவும், பலமாகவும் மார்பை அழுத்த வேண்டும். CPR செய்வதில் மார்ப்பை அழுத்தும் செயலே மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
சிபிஆர் நோயாளிக்கு இதயத் துடிப்பு நின்ற முதல் ஆறு நிமிடத்திலே கொடுக்கப்படுவதாகும். சரியாக செய்யப்படும் சிபிஆரால் இதயத் துடிப்பை திரும்ப நிலையாக்க முடியும். சரியான சிபிஆரால் இறந்ததாக அறிவிக்கப்பட்டவரின் இதயத்துடிப்பை உயிர்ப்பிக்க முடியும். சுயநினைவு வந்த பிறகு அந்த நபரை அக்கரையோடு பார்த்துக்கொள்வது மிகவும் அவசியமாகும். அந்த நபருக்கு அவசரகால உதவிகளைக் கொடுக்க வேண்டும்.
சிபிஆர் வேலை செய்யாதபோது Defibrillator பயன்படுத்துவார்கள். கரெண்ட் ஷாக் கொடுப்பதால் நின்ற இதயம் திரும்ப துடிக்கத் தொடங்கும். CPR என்பது எல்லோருமே கற்றுத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய முதலுதவியாகும். பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்றில்லை. அவசர காலத்தில் CPR செய்ய வேண்டிய நபருக்கு மார்பை அழுத்துதலை மட்டுமே உதவி கிடைக்கும் வரை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.