Omega 6 foods https://www.youtube.com
ஆரோக்கியம்

ஒமேகா 6 கொழுப்பு அமிலம் எந்தெந்த உணவுகளில் உள்ளன தெரியுமா?

ஜெயகாந்தி மகாதேவன்

ம் உடலின் ஆரோக்கியம் காக்க நாம் உண்ணும் உணவுகளில் உள்ள புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், மினரல்கள், கொழுப்புச் சத்துக்கள் போன்ற ஊட்டச் சத்துக்கள் உதவி புரிகின்றன. அவற்றுள் முக்கியமானது ஒமேகா 3 கொழுப்பு அமிலம். ஒமேகா 3 போலவே, ஒமேகா 6 கொழுப்பு அமிலமும் மூளையின் வளர்ச்சிக்கும், சிறப்பான இயக்கத்திற்கும் உதவுகின்றது. இந்த ஒமேகா 6 கொழுப்பு அமிலம் எந்தெந்த உணவுகளில் இருந்து கிடைக்கிறது? அதன் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

சஃப் ஃபிளவர் ஆயில் என்பது ஒரு சமையல் எண்ணெய். ஒரு டேபிள் ஸ்பூன் சஃப் ஃபிளவர் எண்ணெயில் 12.7 கிராம் ஒமேகா 6 உள்ளது. இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க உதவும் ஒமேகா 9 கொழுப்பு அமிலமும் இதில் உள்ளது.

ஒரு அவுன்ஸ் வால்நட்டில் 10.8 கிராம் ஒமேகா 6 உள்ளது. ஒரு அவுன்ஸ் சன் ஃபிளவர் விதைகளில் 9.3 கிராம் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்களும், வைட்டமின் E மற்றும் மக்னீசியம் போன்ற அத்தியாவசியமான ஊட்டச் சத்துக்களும் உள்ளன.

ஒரு டேபிள் ஸ்பூன் கனோலா ஆயிலில் 2.66 கிராம் ஒமேகா 6 மற்றும் 0.13 கிராம் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அரை கப் டோஃபுவில் 3 கிராம் ஒமேகா 6 கொழுப்பு அமிலம் உள்ளது.

ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் ஏறத்தாழ 1.8 கிராம் ஒமேகா 6 கொழுப்பு அமிலம் உள்ளது. ஒரு அவுன்ஸ் பாதாம் பருப்பில் 3.7 கிராம் ஒமேகா 6 கொழுப்பு அமிலம் உள்ளது. பாதாம் பருப்பு இதய ஆரோக்கியம் காக்கவும் உதவுகிறது.

ஒமேகா 6 கொழுப்பு அமிலம் சருமம் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியம், இனப்பெருக்கம், மெட்டபாலிசம் போன்றவை சிறக்கவும் பெரிதும் உதவி புரிகின்றன.

மேற்கூறிய உணவுகளை தினசரி உட்கொள்ள, உடலின் மொத்த ஆரோக்கியமும் மேம்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT