chips packet 
ஆரோக்கியம்

சிப்ஸ் பாக்கெட்டுகளில் நைட்ரஜன் வாயு நிரப்பப்படுவது எதற்கு தெரியுமா?

ம.வசந்தி

ளிகை கடைக்கோ அல்லது சூப்பர் மார்க்கெட்டுக்கோ சென்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை ஸ்நாக்ஸ் என்ற பெயரில் முதலில் எடுப்பது காற்று அடைக்கப்பட்ட சிப்ஸ் பாக்கெட்டுகளைத்தான். அந்தப் பாக்கெட்டுகளில் சிப்ஸ் பாதியென்றால் காற்று, அதாவது நைட்ரஜன் வாயு மீதி பகுதியை அடைத்திருக்கும். அப்படி அந்த சிப்ஸ் பாக்கெட்டுகளில் நைட்ரஜன் வாயு அடைக்கப்படுவதற்கான காரணம் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

நைட்ரஜன் ஒரு மந்த வாயு ஆகும். அதாவது, உருளைக்கிழங்கில் உள்ள எண்ணெய் மற்றும் கொழுப்புகளுடன் அது வினைபுரிவதில்லை. அதோடு, அவற்றின் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்க உதவுகிறது. இதனால் அவற்றை மிருதுவாகவும் புதியதாகவும் வைத்திருக்க இது உதவுகிறது.

மேலும், இது சிப்ஸின் புத்துணர்ச்சியையும் மிருதுவான தன்மையையும் பராமரிக்க உதவுகிறது. பாக்கெட்டில் ஆக்ஸிஜன் நிரப்பப்பட்டால், அது ஈரப்பதத்தை அதிகரிக்கும். இந்நிலையில், நைட்ரஜன் உலர்ந்த வாயுவாக இருப்பதால், பாக்கெட்டுக்குள் இருக்கும் சுற்றுச்சூழலை ஈரப்பதம் இல்லாமல் வைத்திருக்க உதவுகிறது. ஆகையால், இது வாழைப்பழம் மற்றும் பிற பொருட்களைக் கொண்ட சிப்ஸ் பாக்கெட்டுகளில் பயன்படுத்தப்படுகிறது.

20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பேக்கேஜிங்கில் நைட்ரஜனைப் பயன்படுத்தும் பழக்கம் பிரபலமடையத் தொடங்கியது. உற்பத்தியாளர்கள் தயாரிப்புத் தரத்தை மேம்படுத்த வழிகளைத் தேடினார்கள். இதில், பாக்கெட்டை மூடுவதற்கு முன்பு ஆக்ஸிஜன் நைட்ரஜனால் மாற்றப்படுகிறது. இது பேக்கேஜிங் சிப்ஸ்களுக்கு நீண்ட ஆயுளையும் மொறுமொறுப்பையும் அளிக்கிறது.

வெவ்வேறு பிராண்டுகள் வெவ்வேறு சதவீத நைட்ரஜனைப் பயன்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, லேஸ் பாக்கெட்டுகளில் 85 சதவிகிதம் நைட்ரஜன் உள்ளது. பிங்கோ மற்றும் அங்கிள் சிப்ஸ் போன்ற பிற பிராண்டுகள் 75 சதவீதத்தை பயன்படுத்துகின்றன. நைட்ரஜன் வாயு FDA ஆல் ‘generally recognized as safe’ (GRAS) என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது உணவு பேக்கேஜிங்கில் நைட்ரஜனை பயன்படுத்துவது பாதுகாப்பானது என்று அர்த்தம். சுகாதார ஆபத்தை ஏற்படுத்தாது.

சிப்ஸ் பாக்கெட்டுகள்  தூய நைட்ரஜனால் நிரப்பப்படுவதோடு அளவும் மிகக் குறைவாக இருப்பதால் ஆரோக்கியத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. நைட்ரஜன் வாயு நிறமற்ற, மணமற்ற வாயு ஆகும். இதன் வேதியியல் சின்னம் N. சாதாரண வெப்பநிலை மற்றும் அழுத்தம் காரணமாக அது வாயு நிலையில் உள்ளது. பூமியின் வளிமண்டலத்தில் சுமார் 78 சதவிகிதம் நைட்ரஜன் உள்ளது. இது பொதுவாக எதிர்வினையாற்றாது. இது 1773ல் ஸ்காட்டிஷ் விஞ்ஞானி டேனியல் ரதர்ஃபோர்ட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது என்பது கூடுதல் தகவலாகும்.

தக்காளி பாத் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க! 

கிஞ்சுகி (Kintsugi) எனக்கு உணர்த்திய 4 வாழ்க்கைப் பாடங்கள்! 

குழந்தைகள் சிறந்த மனிதர் என்று பெயரெடுக்க 10 வாழ்க்கைப் பாடங்கள்!

மரத்தை பாமாவுக்கும் மலரை ருக்மிணிக்கும் அருளிய பரந்தாமன்!

சிறுகதை – மரியாதை!

SCROLL FOR NEXT