காது வலி பெண் 
ஆரோக்கியம்

சளி பிடித்தால் காதில் வலி ஏற்படுவது ஏன் தெரியுமா?

மகாலெட்சுமி சுப்ரமணியன்

ளி பிடித்தால் ஏற்படும் மூக்கடைப்பு, நாசிக் குழாயின் நாசோபார்னெக்ஸ் என்ற அடிப்பகுதியில் ஏற்படும் ஒவ்வாமை காரணமாக காதுகளில் வலி உண்டாகிறது. சளியால் ஏற்படும் நரம்பு அழுத்தம் காதில் வலியை உண்டாக்கும். சுற்றிலும் குளுமையான சூழ்நிலையில் பலருக்கு உடல் அலுப்பும், வலியும் இருக்கும்.

சளி, இருமல் மற்றும் தொண்டையில் ஏற்படும் கிருமி தொற்றால் ஏற்படக்கூடிய காது வலி, பிரச்னைகளைக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். காதில் ஏற்படும் அசௌகரிய உணர்வு, பாதிக்கப்பட்ட காதில் கேட்கும் திறன் குறைவு, குமட்டல், வயிற்றுப்போக்கு, தலைவலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் மூலம் இதைக் கண்டறியலாம்.

மென்மையான திசுக்களால் ஆன காதின் அமைப்பு, மூளை மற்றும் தொண்டை நரம்புகளை இணைகிறது. இதில் குளிர்ந்த காற்று நேரடியாகப் படும்போது காதில் வலி உண்டாகிறது. இதை அலட்சியப்படுத்தும்போது தீவிரமாகி, இந்த வலி மூளை வரை பரவி அதீத தலைவலியை உண்டாக்கும். காதின் மென்மையான‌அமைப்பால் சளி அடைப்பு, வலி தொற்று போன்றவை எளிதில் ஏற்படும்.

காது வலிக்கு தொண்டையில் இருந்து பரவும் பாக்டீரியா தொற்றே காரணம். இதனால் காதில் சீழ் கோர்த்து தண்ணீர் வடிய ஆரம்பிக்கும். சைனஸ், சளி பிரச்னை ஏற்படும்போது காது வலி உண்டாகி காது நரம்புகளில் அழுத்தம் உண்டாகி காது வலியும், தலைவலியும் ஒருசேர உண்டாகும்.

இது நாளடைவில் காது கேளாமை பிரச்னைகளைக் கொடுத்து விடும். தற்காப்பு வழிமுறைகளாக சளி பிடித்திருக்கும்போது, காதினுள் நேரடியாகக் காற்று, குளிர்ந்த காற்று நுழையாதபடி காதை மூடிக்கொள்ள வேண்டும். இதற்கு மஃப்ளர், இயர்பட்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். காதுகளை ஈரமில்லாமல் டிரையாக வைக்க வேண்டும். குளித்த பின்னர் காதில் இருக்கும் ஈரத்தை உடனே துடைக்க வேண்டும். காட்டன் பட்ஸ் எப்போதும் பாதுகாப்பானது. காதில் வலி, காதில் குத்தல், எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கு ENT மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். நாமாக வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். காது வலி ஏற்படும்போது வெந்நீரில் ஒத்தடம் கொடுக்கலாம்.

வாரம் இருமுறை தூதுவளை இலைச்சாற்றை ரசம், சூப் அல்லது கசாயமாக வைத்துக் குடிக்கலாம். தினமும் ஒருமுறையாவது துளசி, தூதுவளை, எலுமிச்சை போன்ற மூலிகைகளில் தேநீர் தயாரித்து அருந்தலாம்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT