தினமும் இரவு உணவை முடித்துவிட்டு உறங்கச் செல்கிறோம். பிறகு காலை உணவை உட்கொள்ளும்போது ஒரு நீண்ட இடைவெளியைக் கடந்து வந்திருப்போம். அப்போது வயிற்றுக்குள் எதுவுமின்றி காலியாக இருக்கையில் நல்ல ஊட்டச் சத்துக்கள் நிறைந்த சாத்வீகமான உணவுகளை உட்கொள்வது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும். காலையில் வெறும் வயிற்றில் உண்ணக் கூடாத 8 வகை உணவுகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. சிட்ரஸ் ஃபுரூட்ஸ்: ஆரஞ்சு மற்றும் கிரேப் போன்ற சிட்ரஸ் வகைப் பழங்களில் அதிகளவில் சிட்ரஸ் ஆசிட் அடங்கியிருக்கும். இவற்றை வெறும் வயிற்றில் உட்கொண்டால் வயிற்றின் உள்பகுதியில் எரிச்சல் மற்றும் ஜீரணக் கோளாறுகள் உண்டாகும்.
2. பதப்படுத்தப்பட்ட உணவுகள்: காலையில் முதலில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொண்டால் நம் உடலின் இரத்த சர்க்கரை அளவு திடீரென உயரும். இதனால் உடல் நலக் குறைவு ஏற்படும் அபாயம் உண்டாகும்.
3. பொரித்த உணவுகள்: எண்ணெயில் பொரித்த பூரி, வடை போன்ற உணவுகளை வெறும் வயிற்றில் உண்ணாமல் தவிர்ப்பது நலம். ஏனெனில், அவற்றில் உள்ள அதிகளவு கொழுப்பு எளிதில் ஜீரணமாகாது.
4. பால் பொருட்கள்: பால், சீஸ், யோகர்ட் போன்ற பால் பொருட்களை வெறும் வயிற்றில் உண்பது நல்லதல்ல. ஏனெனில், அவற்றில் உள்ள லாக்டோஸ் என்ற ஒரு வகை சர்க்கரையானது நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு தீங்கிழைக்கும் உணவாக மாறக்கூடும்.
5. காஃபினேட்டட் ட்ரிங்க்ஸ்: சில வகை பானங்களில் உள்ள காஃபினானது வாய்வு சம்பந்தப்பட்ட கோளாறுகளை உண்டுபண்ணச் செய்யும். மேலும் வீக்கங்கள் மற்றும் மலச்சிக்கலையும் உண்டுபண்ணும்.
6. கார்போனேடட் ட்ரிங்க்ஸ்: வெறும் வயிற்றில் கார்போனேடட் ட்ரிங்க்ஸ் அருந்துவதால் அதிலுள்ள கார்பன் வயிற்றுள் வீக்கம் போன்ற உபாதைகளை உண்டுபண்ணும்.
7. தக்காளி: தக்காளியை வெறும் வயிற்றில் உட்கொண்டால் அதிலுள்ள டேன்னிக் ஆசிட் வயிற்றில் எரிச்சலை உண்டு பண்ணும்.
8. ஸ்பைஸஸ்: ஸ்பைஸஸ் நிறைந்த உணவு ஜீரணமாவது கடினம். மேலும், இது இரைப்பை, குடல் பாதையின் இயக்கங்களை சீர் குலைக்கும். அஜீரணத்தை உண்டுபண்ணும்.
மேற்கூறிய 8 வகை உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் உண்பதைத் தவிர்ப்போம்; உடல் ஆரோக்கியம் காப்போம்!