Foods that cure nerve problems 
ஆரோக்கியம்

நரம்புப் பிரச்னை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்!

நான்சி மலர்

ன்றைய தலைமுறையினர் நரம்பு சார்ந்த பிரச்னை மூலமாக அதிகமாக அவதிப்படுகிறார்கள். இதனால், கைநடுக்கம், சோர்வு, தலைவலி, நரம்புகள் இழுப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதை சரிசெய்வதற்கு என்னென்ன ஆரோக்கிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி இப்பதிவில் காண்போம்.

1. அத்திப்பழம்: அத்திப்பழத்தை நரம்பு சார்ந்த பிரச்னைகளுக்கு சாப்பிட்டு வரலாம். தினமும் 2 அத்திப்பழம் சாப்பிட்டு வருவதால், நரம்புக்கு புத்துணர்ச்சி மற்றும் பலம் கிடைக்கிறது. நரம்பு தளர்ச்சி பிரச்னையும் குணமாகிறது.

2. பிரண்டை: பிரண்டையை உணவில் சேர்த்துக்கொள்வதால், நரம்பை பலப்படுத்துவதோடு, உடலுக்கும் ஆரோக்கியத்தை தருகிறது. பிரண்டையை வாரம் இருமுறை சாப்பிட்டு வருவதால், நரம்பு சம்பந்தமான பிரச்னை ஏற்படாது. பிரண்டையை சட்னி செய்து சாப்பிடுவது சிறந்தது.

3. மாதுளை பழம்: நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எடுத்துக்கொள்ள வேண்டிய பழம் மாதுளையாகும். இது நரம்புப் பிரச்னைகளை சரிசெய்வது மட்டுமில்லாமல், உடல் சூட்டை குறைத்து உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.

4. நெல்லிக்காய்: நெல்லிக்காய் சாப்பிடுவது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வர, நரம்புத்தளர்ச்சி பிரச்னைகள் வராது.

5. வெற்றிலை: வெற்றிலையை நன்றாக மென்று சாப்பிடுவது நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் வராமல் தடுக்கிறது. வெற்றிலையை சாப்பிடுவதால் நன்றாகப் பசி எடுக்கும். இது செரிமானக் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

6. முருங்கைக்கீரை: பொதுவாகவே, முருங்கைக்கீரைக்கு நரம்புகளை பலப்படுத்தக்கூடிய சக்தி அதிகமாகவே இருக்கிறது. கண் நரம்புகளை பலப்படுத்த முருங்கைக்கீரையை எடுத்துக் கொள்ளலாம். வாரத்தில் மூன்று முறை முருங்கைக்கீரையை உணவில் எடுத்துக்கொள்வது சிறந்தது.

7. பேரிச்சம்பழம்: பேரிச்சம்பழத்தை பாலில் சேர்த்து சாப்பிடுவதால், உடலுக்குத் தேவையான பலத்தைக் கொடுக்கிறது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, பலகீனமான உடல்கூட பலம் பெற ஆரம்பிக்கும். உடல் மெலிந்துக் காணப்படுபவர்கள் தினமும் பேரிச்சம்பழத்தை சாப்பிட்டு வர, உடல் ஆரோக்கியம் மேம்படும். இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை தினமும் ஒரு பேரிச்சம்பழத்தை உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கீரைகளையும் நரம்புகள் நலம் பெற எடுத்துக்கொள்ளலாம். உடல்நல பிரச்னைகள் இருப்பவர்கள்தான் இதையெல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. உடலை ஆரோக்கியமாக பேணிக் காக்கவும் இந்த உணவுகளை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

கவிதை: போதி மரமில்லா புத்தர்கள்!

Table Manners என்றால் என்ன என்று தெரியுமா உங்களுக்கு? அத்தனையும் கடைப்பிடிக்கிறீர்களா?

காலை எழுந்ததுமே சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன தெரியுமா?

சிறுவர் சிறுகதை - மோர்சாதம்

விருந்துக்கு ஏற்ற வாழைப்பூ வடை, கசகசா கீர்!

SCROLL FOR NEXT