பூண்டு பால் https://cookpad.com
ஆரோக்கியம்

இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகளைப் போக்கும் பூண்டு பால்!

மகாலெட்சுமி சுப்ரமணியன்

பூண்டு பற்களை பாலில் வேக வைத்து, அதனோடு பனங்கற்கண்டு, மிளகுத்தூள், மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து சற்று ஆறியதும் வெதுவெதுப்பான சூட்டில் குடிக்க பலவித நன்மைகள் உண்டாகும். அது குறித்த நன்மைகளை இந்தப் பதிவில் காண்போம்.

* பூண்டு பால் குடிக்க, சளி மற்றும் காய்ச்சல் பிரச்னைகளிலிருந்து விடுபட உதவுகிறது.

* பூண்டு கலந்த பாலை முகப்பருக்கள் மீது தடவி சற்று நேரம் காய்ந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ முகப்பரு பிரச்னைகள் குறையும்.

* இடுப்பு வலி, மூட்டு வலி, வாய்வுத் தொல்லை மற்றும் கால் வலி பிரச்னைகளுக்கு பூண்டு பால் குடித்து வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

* பூண்டு பால் உடல் பருமனைக் குறைக்கும். இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, இரத்தத்தில் சேரும் கொழுப்புகளை குறைக்க உதவுகிறது.

* இரத்த அழுத்தப் பிரச்னையை கட்டுப்படுத்துவதோடு, இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. மேலும், பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்னைகளை பூண்டு பால் குணமாக்குகிறது.

* மலேரியா, காச நோய், யானைக்கால் நோய் மற்றும் ப்ளேக் போன்ற நோய்கள் உருவாகக் காரணமான கிருமிகளுக்கு எதிராக பூண்டு பால் செயல்படுகிறது.

* தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால், தாய்ப்பாலின் சுரப்பு மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

* நுரையீரல் அழற்சி உள்ளவர்கள், பூண்டு கலந்த பாலை குடித்து வந்தால் நுரையீரல் அழற்சிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

* செரிமான திரவத்தைத் தூண்டி, உணவுகளை எளிதில் செரிமானம் அடையச் செய்ய பூண்டு பால் மிகவும் உதவுகிறது.

* பூண்டு பாலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், வயிற்றுப் புழுக்கள் அழிந்து விடும். சிறியோர் முதல் பெரியவர் வரை கஷ்டப்படும் மலச்சிக்கலை குணமாக்க வல்லது.

* வயிறு உப்புசம், செரிமானமின்மையைப் போக்கி உடலை வலுவாக்கும்.

இவ்வாறு பூண்டு பால் பல விதங்களில் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கிறது.

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT