Onion.
Onion. 
ஆரோக்கியம்

வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டால்.. ஆச்சரியமா இருக்கே!

கிரி கணபதி

காலாகாலமாக உணவின் சுவைக்காக பயன்படுத்தப்பட்டு வரும் வெங்காயத்தை பல மருத்துவ நன்மைகளுக்காக நாம் பயன்படுத்தலாம். ஆனால் இது பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை. சரி வாருங்கள் இந்த பதிவில் வெங்காயத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தி உடல் உபாதைகளைப் போக்கலாம் எனத் தெரிந்து கொள்ளலாம்.

  1. வெங்காயத்தின் தோலை உரித்து அதில் கொஞ்சம் வெல்லம் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர உடலில் உள்ள பித்தம் குறையும்.

  2. வெங்காயத்தை சுட்டு, அதில் கொஞ்சம் நெய், மஞ்சள் தூள், சேர்த்து பிசைந்து லேசாக மீண்டும் வதக்கி கட்டிகள் மேல் வைத்து கட்டினால், அது விரைவில் பழுத்து உடையும்.  

  3. வெங்காயச்சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சூடாக்கி காதில் விட்டால், காதில் ஏற்படும் இரைச்சல் பிரச்சனை குணமாகும்.

  4. வெங்காயச் சாற்றை மோரில் கலந்து குடித்தால் இருமல் குறையும். மேலும் வெங்காயச்சாறு வயிற்று பிரச்சனைகளை நீக்க உதவும்.

  5. வெங்காயம் மற்றும் வெங்காய பூவை சமைத்து சாப்பிடுவது மூலமாக உடல் சூடு தணிந்து மூல பாதிப்புகள் குறையும்.

  6. வெங்காயத்திற்கு குடல்களை சுத்தம் செய்யும் பண்பு இருப்பதால், ஜீரணத்திற்கு பெரிதும் உதவுகிறது.  

  7. வெங்காயத்தில் குறைந்த அளவே கொழுப்புச் சத்து இருப்பதால், இதை உடல் எடை குறைப்பவர்கள் தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

  8. வெங்காய சாற்றை தண்ணீரில் கலந்து குடித்தால் தூக்கம் நன்றாக வரும். 

  9. படை, தேமல் போன்றவற்றிற்கு வெங்காயச் சாறு பூசினால் அவை விரைவில் குணமாகும். 

  10. அடிக்கடி தலைவலி ஏற்படுபவர்கள் வெங்காயத்தை நறுக்கி நுகர்ந்து பார்த்தால் அந்த நெடி தலைவலியைக் குறைக்கும். 

  11. வெங்காயத்தை வேகவைத்து அதில் தேன் மற்றும் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் வலிமை பெறும்.

  12. தினசரி வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டால், நரம்புத் தளர்ச்சி குணமாகும். வயிற்றுப்போக்கு இருப்பவர்கள் வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து சாப்பிட்டால் உடனடியாக நிற்கும். 

இப்படி வெங்காயம் நமக்கு செய்யும் நன்மைகள் ஏராளம். எனவே தினசரி வெங்காயத்தை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டு ஆரோக்கியமாக இருங்கள்.  

60 + வயது... அழகு நிலையம் செல்வது எதற்கு?

சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி சந்தோஷமாக வாழ்வோம்!

அப்பர் மிடில் கிளாஸ் மக்கள் இவங்கதானா?

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT