Heart-healthy foods,
Heart-healthy foods, 
ஆரோக்கியம்

இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகளும், கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களும்!

பிருந்தா நடராஜன்

இதய ஆரோக்கியம் நன்றாக இருக்க Saturated fats, அதாவது நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் மட்டும் கொண்ட உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பாலாடைக்கட்டி, வெண்ணெய், மாட்டுக் கொழுப்பு, கொழுப்பு நிறைந்த இறைச்சி சாக்லேட் மற்றும் பல தயாரிக்கப்பட உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

சரி, எதெல்லாம் சாப்பிடலாம்?

எல்லோருக்கும் தெரியும் ஃப்ரெஷ் பழங்கள், காய்கறிகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் என்று. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். கீரை வகைகள் ப்ரோக்கலி ஒமேகா 3 நிறைந்த காய்கறி வகைகள். இவற்றே சமைத்து கூட்டாக சாப்பிடலாம் அல்லது சூப் செய்தும் குடிக்கலாம்.

பூண்டு: இதய ஆரோக்கியத்திற்கு பூண்டு மிகவும் நல்லது. தினமும் காய்கறிகளுடன் பூண்டு மிளகு சீரகம் போட்டு வேக வைத்து அரைத்து சூப்பாக குடித்தால் அனைத்து சத்துக்களும் கிடைக்கும்.

கடுகு எண்ணெய்: சமையலுக்கு ஒமேகா 3 நிறைந்த கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் நல்லது என்று கூறப்படுகிறது. ஒவ்வாமை பிரச்சினை உள்ளவர்கள் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் சேர்த்து சாப்பிடுவது அவசியம். ‌‌

சியா விதைகள்: இதய ஆரோக்கியத்திற்கு சியா விதைகள் உதவுகிறது. சாலட் செய்யும்போது அதில் சேர்த்து சாப்பிடுவது நல்லது. ஓட்ஸ் கஞ்சி குடிக்கும்போது சியா விதைகளை சேர்த்து செய்தால் நல்லது.

வால்நட்: வால்நட் ஒமேகா 3 நிறைந்த ஒன்றாகும். மூளையினை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். வால்நட்டை ஊற வைத்து சாப்பிடலாம்.

ஒமேகா 3 நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது உடலை இளமையாக வைத்திருக்க உதவும். தினசரி உணவில் பாதாம் பருப்பு, பிஸ்தா ஆளி விதைகள் சியா விதைகளை சாப்பிடலாம்‌‌. இவற்றை அளவோடு சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.

இதய ஆரோக்கியம் காக்க செய்ய வேண்டியவை:

உங்கள் தினசரி உணவை‌ சில தாவர அடிப்படையிலான உணவுகளுடன் சரி செய்வது எல்டிஎல் கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

முளைவிட்ட சிறுதானிய உணவுகள் மிகவும் நல்லது. காலை சிற்றுண்டியுடன் ஒரு கப் ஏதாவது முளைவிட்ட பயறு வகைகள் சாப்பிடலாம்.

மிக முக்கியமான விஷயம், புகைப்பிடித்தல் அறவே கூடாது. நீங்கள் புகை பிடிப்பவர் ஆக இருந்தால் புகை பிடிக்காதவர்களை விட இரண்டு மடங்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மது அருந்துதல் தவிர்க்க வேண்டும். உணவில் அதிக உப்பு தவிர்க்க வேண்டும்.

இதயத்தின் தசைகள் வலுவாக இருக்க வழக்கமான உடற்பயிற்சி அவசியம். தினமும் 20 விருந்து 30 நிமிடங்கள் வரை கார்டியோ பயிற்சி மேற் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுவது மட்டுமன்றி உங்கள் மன அழுத்தத்தையும் குறைக்கிறது..

இன்றைய வாழ்க்கை முறையில் மன அழுத்தம் தவிர்க்க முடியாத ஒன்று என்றாலும் நம் உடலை பாதிக்கும் அல்லவா? மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க யோகா தியானம் செய்யுவும்.

தவறாமல் டாக்டரின் அறிவுரையின் படி உங்கள் கொலஸ்டிரால் அளவை சரி பார்க்கவும். தொடர்ந்து ஒரு இடைவெளியில் கண்காணிக்கப்பட வேண்டும். வருடாந்திர தடுப்பு சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்வது அவசியம். ஆரோக்கியமான இதயம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முக்கியமான ஒன்று. ஆரோக்கியமான உணவு உடற்பயிற்சி மற்றும் தகுந்த தடுப்பு சுகாதார பரிசோதனைகள் அதற்கு பெரிதும் உதவும்.

இதுபோல, சத்தான உணவு வகைகளை உண்டு, உடற்பயிற்சி செய்து, இரத்தப் பரிசோதனைகள் மேற்கொண்டு இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்போம்.

விசாகத்துக்கும், தாமிரபரணிக்கும் உள்ள தொடர்பு!

பப்பாளி இலையில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?

மாமிச உண்ணிகளின் வயிற்றை விட, தாவர உண்ணிகளின் வயிறு பெரிதாக இருப்பது ஏன் தெரியுமா? 

முத்து முத்தாக வியர்வை துளிர்க்கும் சிக்கல் சிங்காரவேலர் கோயில் அதிசயம்!

தந்தத்துக்கு நிகரான கொம்புகளைக் கொண்ட காண்டாமிருகங்கள்!

SCROLL FOR NEXT