How can diabetics control their cravings for sweets? 
ஆரோக்கியம்

நீரிழிவு நோயாளிகள் இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது?

நான்சி மலர்

தீபாவளி போன்ற பண்டிகை சமயங்களில் நிறைய இனிப்புகள் வீட்டில் செய்வார்கள். அதைப் பார்த்தாலே சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயமாக அனைவருக்கும் தோன்றும். எனினும், நீரிழிவு நோய் உள்ளவர்கள் சர்க்கரையின் அளவில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். இனிப்பு சாப்பிட வேண்டும் எனும் அவர்களின் ஆசையை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1. இனிப்பு சாப்பிட வேண்டும் என்று தோன்றும் சமயம் அவர்கள் அதற்கு மாற்றாக பழங்களை எடுத்துக்கொள்ளலாம். முக்கியமாக, Glycemic index குறைவாக உள்ள பழங்களை எடுத்துக்கொள்வதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது. பெர்ரி, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை எடுத்துக்கொள்வது சிறந்தது.

2. உணவில் புரதம் மற்றும் நார்ச்சத்தை சேர்த்துக்கொள்வது இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை கட்டுக்குள் கொண்டுவரும். புரதம் மற்றும் நார்ச்சத்தை உணவில் எடுத்துக்கொள்வதால், முழு உணவு சாப்பிட்ட திருப்தியை பெறலாம். மேலும், இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள் வைக்கும்.

3. சில சமயங்களில் நீரிழிவு நோயாளிகள் தாகம் எடுப்பதைக்கூட பசியில் இருக்கிறோமோ? என்று தவறாக நினைத்துக் கொள்வதுண்டு. எனவே, நன்றாக தண்ணீர் குடித்து உடலை hydrated ஆக வைத்துக்கொள்வது சிறந்தது. இது இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தைக் குறைத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

4. சாப்பாடு சாப்பிடாமல் இருப்பது இரத்த சர்க்கரை அளவு குறைய காரணமாகும். இதனால் இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். வழக்கமாக சாப்பிடக்கூடிய நேரத்தில், சாப்பிடக்கூடிய அளவில் உணவை எடுத்துக்கொண்டால் அதிகமான பசியைக் கட்டுப்படுத்தலாம்.

5. சியா விதைகளை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதால், இது வயிற்றில் சென்று ஜெல்லி போன்று உருவாகிவிடும். இதனால் நீங்கள் நன்றாக சாப்பிட்ட உணர்வைப் பெற முடியும். இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற எண்ணமும் வராது. மேலும், சியா விதையில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், நார்ச்சத்து உள்ளதால் உடலுக்கு மிகவும் இது நல்லதாகும்.

6. டார்க் சாக்லேட்டில் Flavanols உள்ளது. இது சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. Sugar free கம்மை மெல்வது இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை குறைக்கிறது. இவற்றையெல்லாம் பின்பற்றி இந்த தீபாவளியை இனிப்பாகவும் ஆரோக்கியமாகவும் கொண்டாடுங்கள்.

தமிழ்நாட்டைத் துருக்கியாக்கி, கேரளாவை ஈராக்காக்கி... என்னங்கடா சொல்லவறீங்க?

ஒரே கனவு இருவருக்கு வேறு வேறு பலன்களைத் தருவது ஏன்?

வீழ்ச்சியடைந்து வரும் ஆந்திரப் பிரதேச மாநில கொண்டபள்ளி பொம்மைகள்... கலை காப்பாற்றப்படுமா?

"காடோ-காடோ !" (Ghado-Ghado) - இந்தோனேஷியா ஸ்பெஷல் ரெசிபி!

தினசரி உடற்பயிற்சி செய்வதற்கு முன் இத முதலில் தெரிஞ்சுக்கோங்க!

SCROLL FOR NEXT