How to keep gums safe naturally? 
ஆரோக்கியம்

இயற்கையாக பல் ஈறுகளை பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி? 

கிரி கணபதி

பல் ஈறுகள் நம் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை நம் பற்களை இறுக்கமாக பற்றிக்கொண்டு சரியான இடத்தில் இருக்க உதவுகின்றன. ஈறுகள் ஆரோக்கியமாக இருந்தால் நம் பற்களில் பாக்டீரியா மற்றும் தொற்று நோய்கள் ஏற்படாமல் இருக்கும். ஒருவேளை ஈறுகள் பாதிக்கப்பட்டால், அது பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுத்து பல்நோய், ஈறுநோய் மற்றும் பல் இழப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். இந்தப் பதிவில் இயற்கையாக பல் ஈறுகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான சில வழிமுறைகளைப் பார்க்கலாம். 

பல் ஈறுகளை பாதுகாக்க உதவும் இயற்கை வழிமுறைகள்: 

  • தினசரி காலை மாலை என இருவேளை பல் துலக்குங்கள். குறிப்பாக பல் துலக்கும்போது பல் இடுக்குகளில் சிக்கியுள்ள உணவுத் துகள்கள் மற்றும் அழுக்குகளை கட்டாயம் நீக்க வேண்டும். 

  • பழங்கள், காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். இந்த உணவுகள் உங்கள் ஈறுகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும். 

  • புகைப்பிடிக்கும் பழக்கத்தை தவிர்க்கவும். தொடர்ச்சியாக புகைபிடிப்பதால் ஈறு நோய்க்கான அபாயம் அதிகரிக்கிறது. மேலும், இது வாய் புற்றுநோய் ஏற்படவும் காரணமாகிறது என்பதால், புகைப்பிடிக்கும் பழக்கத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். 

  • வாரத்தில் ஒருமுறையாவது ஈறுகளுக்கு மசாஜ் செய்யுங்கள். ஈறுகளுக்கு மசாஜ் செய்வதால் ரத்த ஓட்டம் அதிகரித்து ஈறு நோய்க்கான அபாயம் குறைய உதவும். 

  • ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரை சந்தித்து, ஈறுகள், பற்கள் என அனைத்தும் சரியாக உள்ளதா? என பரிசோதித்துப் பார்த்து சுத்தம் செய்துகொள்வது நல்லது. 

ஈறுகளுக்கு நன்மை பயக்கும் சில இயற்கை பொருட்கள்: 

தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெய் ஒரு சக்தி வாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு திரவமாகும். இது ஈறு நோய்க்கு எதிராக சிகிச்சை அளிக்க உதவுகிறது. 

கற்றாழை ஜெல்: கற்றாழை ஜெல், ஈறுகளில் உள்ள வீக்கத்தைக் குறைத்து, ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது.  

மஞ்சள்: மஞ்சள் ஒரு கிருமி நாசினி என்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். குறிப்பாக, அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஈறுகளுக்கு எவ்விதபாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது. 

மேலே குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்றி உங்களது ஈறுகளை நீங்கள் முற்றிலும் இயற்கையான முறையில் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். நல்ல வாய்வழி சுகாதாரத்தைப் பராமரிக்க, ஆரோக்கியமான உணவை உண்பது, புகை, மது போன்ற கெட்ட பழக்கத்தைத் தவிர்ப்பது போன்ற வாழ்க்கைமுறை மாற்றங்களை செய்தாலே போதும்.  

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT