உடல் பிரச்னைகள் சிலவற்றுக்கு சில மருந்துகளை தேனோடு சேர்த்து பயன்படுத்தும்பொழுது நோய் சட்டென்று அகலும். குழந்தைகளுக்குக் மருந்து கொடுக்கும்பொழுது அதன் இனிப்பு சுவையால் அழுது ஆர்ப்பாட்டம் செய்யாமல் சாப்பிட்டு விடுவார்கள். அப்படி தேனோடு கலந்து நம் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் மருந்து வகைகளை இந்தப் பதிவில் காண்போம்.
* குழந்தைகளுக்கு வரும் ஜுரத்திற்கு வெற்றிலைச் சாற்றில் கஸ்தூரி, கோரோசனை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மசித்து தேனுடன் கொடுக்க குணமாகும். இதனால் சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும்.
* மஞ்சள் கரிசலாங்கண்ணி சாறு ஒரு அவுன்சுடன் தேன் அரையவுன்சு கலந்து காலை, மாலை குடித்து வந்தால் காமாலை நோய் குணமாகிவிடும்.
* வேப்பிலை சாற்றை தேனுடன் கலந்து உட்கொண்டால் நாள்பட்ட காமாலை நோயைத் தீர்க்கும்.
* இலவங்க பட்டையை நன்றாகப் பொடித்து அதனுடன் தேன், வெந்நீர் சேர்த்து பிசைந்து வலி உள்ள இடத்தில் பற்று போட்டால் உடனே மூட்டு வலி குறையும்.
* சுத்தமான தேனுடன் இலவங்கப்பட்டை பவுடரை கலந்து படுக்கைக்கு செல்லும் முன் முகத்தில் தடவி காலையில் கழுவினால் இரண்டு வாரங்களில் முகப்பரு ஓடிப்போய்விடும்.
* வால்மிளகு பொடியுடன் தேன் கலந்து காலை, மாலை உண்டு வர வயிற்று வலி, தாகம், வெட்டை, சளிக்கட்டு சிறுநீர்ப்பாதை அலர்ஜி அனைத்தும் தீரும். பசி மிகும்.
* நெல்லிக்காய் சாறு, எலுமிச்சைச் சாற்றுடன் தேன் கலந்து மாலை மட்டும் சாப்பிட்டு வர, மதுமேகம் முற்றிலும் தீரும்.
* துளசி இலைச் சாற்றுடன் தேன் மற்றும் வெந்நீர் கலந்து காலை, மாலை ஒரு மண்டலம் சாப்பிட இதய நோய் குணமாகும்.
* வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கிவிடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
* கறிவேப்பிலையுடன் சீரகம் சேர்த்து அரைத்து வாயில் போட்டு வெந்நீர் குடிக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து ஒரு டீஸ்பூன் சுத்தமான தேனை பருக வேண்டும். இவ்வாறு மூன்று வேளை அருந்தி வந்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்.
* ஆடாதொடை பொடியுடன் தூதுவளை பொடியை கலந்து தேனில் குழைத்து சாப்பிட, சளி அகலும்.
* நன்னாரி வேர் பொடியை தேனில் கலந்து அரிப்பு, தேமல் உள்ள இடங்களில் தேய்க்க அது மாறும். இதை காலையில் உண்ண அல்சர் மாறும்.