பிர்செர் மியூஸ்லி https://www.bestrecipes.com
ஆரோக்கியம்

பிர்செர் மியூஸ்லி என்பது கர்ப்பிணிப் பெண்கள் உண்பதற்கு ஏற்ற உணவா?

ஜெயகாந்தி மகாதேவன்

சுவிட்சர்லாந்தில் டாக்டர் மேக்ஸிமிலியன் பிர்செர் ப்ரென்னெர் என்பவரால் 1900ம் ஆண்டின் முற்பகுதியில் உருவாக்கப்பட்டது பிர்செர் மியூஸ்லி (Bircher Muesli) என்ற இந்த  ஓட் மீல் உணவு. இது நசுக்கப்பட்ட ஓட்ஸ், வீட், ரைஸ், பார்லி போன்ற தானியங்களைக் கலந்து, பின் அதில் பால், யோகர்ட், ஃபுரூட் ஜூஸ் போன்றவற்றுள் ஏதாவது ஒன்றை சேர்த்து ஊற வைத்து அதன் மீது நட்ஸ், சீட்ஸ், ஃபிரஷ்ஷான பழத் துண்டுகள் மற்றும் இனிப்பு சுவைக்காக சிறிது தேனும் கலந்து தயாரிக்கப்படுகிறது.

மற்ற ரெகுலர் மியூஸ்லி போல் அல்லாமல் இதை ஊற வைப்பதால் இதன் டெக்ச்சரும் ஜீரணமாகும் தன்மையும் அதிகரிக்கிறது. சர்க்கரை சேர்த்த பிற செரியல்களுடன் ஒப்பிடும்போது மியூஸ்லி ஒரு சிறந்த உணவாகும். இந்த உணவு முழுவதும் நல்ல செரிமானத்துக்கு உதவக்கூடிய உணவுப் பொருட்களால் ஆன கலவையாகும். குளிரூட்டப்பட்ட மியூஸ்லியை உட்கொள்வதால் உடலுக்கு புத்துணர்ச்சியும் நல்ல ஊட்டச் சத்துக்களும் கிடைக்கும். திருப்தியான, நிறைவான உணவு உண்ட உணர்வும் உண்டாகும்.

இதிலிருந்து கிடைக்கும் தரமான கார்போ ஹைட்ரேட்கள் மெட்டபாலிச ரேட்டை உயர்ந்த அளவில் வைத்துப் பராமரிக்க உதவும். இதனால் உடலுக்கு தொடர்ந்து சக்தி கிடைக்கும். இதய ஆரோக்கியத்தைக் காக்கவும் இந்த உணவு உதவி புரியும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு பிர்செர் மியூஸ்லி ஒரு சிறந்த காலை உணவாகும். இதிலுள்ள, உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் சத்துக்கள் அவர்களுக்கு தொடர் சக்தியையும் ஆரோக்கியத்தையும் தரக்கூடியவை.

இதிலுள்ள அதிகளவு நார்ச்சத்து ஜீரணக் கோளாறை உண்டுபண்ணாமல் இருக்கவும், கலோரி அளவு தேவைக்கு அதிகமாக உடலுக்குள் சேராமல் பாதுகாக்கவும் உதவுகிறது. உட்கொள்ளும் பிர்செர் மியூஸ்லியின் அளவை மைண்ட்ஃபுல் அளவிற்கு கட்டுப்படுத்திக்கொள்வது அவசியம். இந்த உணவை உட்கொள்ளத் தீர்மானிக்கும் முன்பு கர்ப்பிணிப் பெண்கள் அவர்களின் மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது.

உணவு மூலம் பரவும் நோய்களைத் தடுக்க, மியூஸ்லியில் சேர்க்கப்படும் பழங்கள் மற்றும் கொட்டைகளை நல்ல முறையில் கழுவி சுத்தப்படுத்திய பின்னரே சேர்ப்பது நல்லது.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT