National Milk Day 
ஆரோக்கியம்

பால் குடிப்பதற்கும், முதுமைக்கும் தொடர்பு உண்டா?

நவம்பர் 26, தேசிய பால் தினம்

கோவீ.ராஜேந்திரன்

பால் ஊட்டச்சத்து பண்புகள் நிறைந்தது என்பது தெரிந்ததுதான். சராசரியாக 250 மில்லி கொழுப்பு இல்லாத பாலில் 90 கலோரிகள் மற்றும் 9 கிராம் புரதம் உள்ளது. ஒரு கப் கொழுப்பு இல்லாத பாலில் 8 சதவீதம் வைட்டமின் பி12 மற்றும் 2 சதவீதம் வைட்டமின் ஏ உள்ளது. மேலும் 12 சதவீதம் கால்சியம், 1 சதவீதம் சோடியம், 2 சதவீதம் மெக்னீசியம் மற்றும் 4 சதவீதம் பொட்டாசியம் உள்ளது. பால் வலிமையான எலும்புகளை உருவாக்க உதவுகிறது. அதன் பொட்டாசிய உள்ளடக்கம் காரணமாக உயர் இரத்த அழுத்தத்தை சீரமைக்க உதவுகிறது.

பச்சிளங்குழந்தைகளுக்கு பால் ஒன்றே முக்கிய உணவாகத் திகழ்கிறது. இதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. இது மட்டுமின்றி, இளம் பருவத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு பால் மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுகிறோமோ அதன் பலன் முதுமை காலத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு கை கொடுக்கும் என்கிறார்கள் இங்கிலாந்து மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். பால் மற்றும் அது சார்ந்த பொருட்களில் கால்சியம் சத்து இருக்கிறது. இது எலும்புகளை வலுப்படுத்துகிறது. இந்த சத்து குறைவாக இருக்கும்போது முதுமையில் விரைவில் எலும்பு முறிவுகள் ஏற்படுகிறது. அது மட்டுமின்றி, இளமையில் பாலை விரும்பி சாப்பிடுகிறவர்கள் அதிவேகமாக நடை போடுவார்கள் என்று கூறுகிறார்கள்.

‘எஸ்கெரிசியா கோலி’ எனும் ஒரு வகை பாக்டீரியாவால் உலகில் ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான பேர் நோய்வாய்ப்பட்டு வருகிறார்கள். இந்த பாக்டீரியாவை பால் அழித்து நம்மை பாதுகாக்கிறது என்கிறார்கள் அமெரிக்க பால் ஆராய்ச்சி வல்லுநர்கள். சால்மோனெல்லா கேம், பிலோவேகா உட்பட பல பாக்டீரியாக்களையும் பால் ஓட ஓட விரட்டுகிறது. இதனால் பற்கள், சருமத்தில் ஏற்படும் பல்வேறு நோய்கள் நம்மை அண்டாது பால் பார்த்து கொள்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

நமது மூளையையும், உடலையும் இணைக்கும் நரம்புப் பாதையான வேகஸ் நரம்பின் ஆரோக்கிய மூலமாக வைட்டமின் பி12 உள்ளது. பாலில், இந்த ஊட்டச்சத்து அதிகளவு உள்ளது. இவற்றை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது, ஊட்டச்சத்து பற்றாக்குறை ஈடுசெய்யப்படும்.

தினந்தோறும் 200 மி.லி. பால் உணவு எடுத்துக்கொள்ள நீரிழிவு அபாயத்தை 10 சதவீதத்தைக் குறைப்பதாக இத்தாலிய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இளம் பருவத்தில் பால் மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொண்டு வருகிறவர்கள் ஆஸ்துமா பாதிப்பிலிருந்து விலகி இருக்கிறார்கள் என்கிறார்கள்.

மழைக்காலங்களில் சளி வந்தால் பாலில் மஞ்சள் தூள், மிளகு சேர்த்து சாப்பிடலாம். இது சளியை இலக்கி வெளியேற்ற உதவும். எனவே, இதனை தினமும் காலை மற்றும் இரவில் எடுத்துக் கொள்ளலாம். தொடர்ந்து நெஞ்சில் சளி கட்டி இருமிக் கொண்டிருப்பவர்களுக்கும் சளி உறைந்திருப்பவர்களுக்கும் மிளகு, மஞ்சள் பால் அருமருந்தாகும். நல்ல பசும் பாலை காய்ச்சி காலை, மாலை என இரு வேளைகளிலும் எடுத்துகொண்டால் மூட்டு வலி குறையும். இதில் வெள்ளை சர்க்கரை சேர்க்கக் கூடாது. மேலும், பாலில் சிறிது மஞ்சள்தூள், மிளகுத்தூள் சேர்த்து குடிப்பது உடலுக்கு நல்லது. அதிக கால்சியம் உள்ள ஒரு அருமையான உணவு பால் என்பதால் மூட்டு வலியை குணப்படுத்துவதற்கு உதவும்.

கிஸ்மிஸ் பழத்தை பசும்பாலில் ஊற வைத்து அரை மணி நேரத்திற்கு பிறகு அதை அழுத்திப் பிழிந்து சாறு எடுத்து வடிகட்டி குழந்தைகளுக்குக் கொடுத்து வர மலச்சிக்கல் தீரும். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சூடான நீர் குடித்து நாக்கின் சுவை மொட்டுகள் பாதித்து விட்டால் அப்போது பால் குடிக்கலாம். ஏனெனில், பாலில் இருக்கும் கேசீன் புரதம் எரியும் உணர்வை இல்லாமலாக்கி நாக்கை சரிப்படுத்தும். அதிகமான வெயில், காயம் இப்படியான தாக்கங்கள் சருமத்தில் ஏற்பட்டால் சருமம் எரிய ஆரம்பிக்கும். இதுபோன்ற நேரங்களில் பால் மற்றும் தேன் கலந்து கழுவ வேண்டும். இது பாக்டீரியா தாக்குதலை தடுத்து நிவாரணம் கொடுக்கும்.

செத்த பிறகும் முடி வளருமா?

சபரிமலை ஐயப்பன் சிலையை யார் செய்ய வேண்டும்? சீட்டுப் போட்டுப் பார்க்கப்பட்டது தெரியுமா?

சிறுவர் சிறுகதை; முல்லாவின் தந்திரம்!

நாம் பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்களில் 40,000-க்கும் அதிகமான பாக்டீரியாக்கள் உள்ளனவாம்! சுத்தம் செய்வது எப்படி?

விருச்சிக வியூகத்தை மனதில் ஏற்றால் வேலை கிடைக்காமல் போகாது!

SCROLL FOR NEXT