சமீபத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி கல்லீரல் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. அவருக்கு ஏற்பட்ட புற்றுநோயின் தீவிரத் தன்மை நான்காம் கட்டத்தை எட்டியதும்தான் அறிகுறிகள் தென்பட்டுள்ளது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக இலங்கைக்கு சென்ற நிலையில், சிகிச்சை தொடங்குவதற்கு முன்பாகவே அவரது உயிர் பிரிந்தது. எனவே, இந்த பதிவில் இவ்வளவு கொடூரமான கல்லீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் பற்றி பார்க்கலாம்.
மக்களுக்கு பொதுவாக வரும் கல்லீரல் புற்றுநோயை Hepatocellular Carcinoma என அழைக்கிறார்கள். இது உலக அளவில் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு தீவிர உடல்நிலை பாதிப்பாகும். கல்லீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இவற்றின் சரியான காரணங்களைப் புரிந்துகொண்டு ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து சிகிச்சையளிப்பது மிக முக்கியமாகும்.
1. நாள்பட்ட ஹெபடைடிஸ் நோய் தொற்றுகள்: நாள்பட்ட ஹெபடைடிஸ் பி மற்றும் சி நோய் தொற்றுகள் கல்லீரல் புற்று நோய்க்கு முக்கிய காரணமாக அமைகிறது. இதனால் கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டு செல்களை சேதப்படுத்துகிறது. இது காலப்போக்கில் கல்லீரலில் புற்றுநோய் உருவாக வழி வகுக்கும்.
2. மது அருந்துதல்: அதிகப்படியாக மது அர்த்தத்தில் கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இது கல்லீரல் அலர்ஜிக்கு வழி வகுத்து, கல்லீரல் திசுக்களை சேதப்படுத்துகிறது. நீண்ட காலமாக மது அருந்துதல் மற்றும் கல்லீரலில் கொழுப்பு படித்தல் போன்றவற்றால் கல்லீரல் புற்றுநோயின் அபாயம் அதிகரிக்கிறது. இதைத் தடுப்பதற்கு அதிகமாக மது அருந்துவதில் இருந்து ஒருவர் வெளிவந்து சரியான வாழ்க்கை முறையைக் கடைபிடிக்க வேண்டும்.
3. கொழுப்பு கல்லீரல் நோய்: கல்லீரலில் அதிகப்படியாக கொழுப்பு சேர்வதால், அது கல்லீரல் புற்று நோய்க்கு வழி வகுக்கும். கல்லீரலில் கொழுப்பு சேரும் இந்த நிலை, அதிகப்படியான மது அருந்துதலுடன் தொடர்பில்லாமல், உடற்பருமன், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்தின் காரணமாக ஏற்படுகிறது. இந்த வகையில் உருவாகும் கல்லீரல் புற்றுநோயை தொடக்கத்திலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை மூலமாக குணப்படுத்த முடியும்.
4. உடற்பருமன் மற்றும் நீரிழிவு: உடற்பருமன் மற்றும் டைப் 2 நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு கல்லீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம். இவற்றால் கல்லீரல் கொழுப்பு நோய் ஏற்பட்டு அலர்ஜி உண்டாக வழிவகுக்கும். இது காலப்போக்கில் உருமாறி கல்லீரல் புற்றுநோயாக மாறிவிடும். எனவே இந்த பாதிப்பில் இருந்து தப்பிக்க ஆரோக்கிய எடை மற்றும் உணவு முறையை பின்பற்றுவது அவசியம்.
5. சுற்றுச்சூழல் காரணிகள்: சில சுற்றுச்சூழல் நச்சுக்கள் மற்றும் ரசாயனங்களின் காரணமாக கூட கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளது. தொழிற்சாலைகளில் உபயோகிக்கப்படும் வினைல் குளோரைடு மற்றும் அர்சனிக் போன்ற ரசாயனங்கள் மூலமாக, கல்லீரல் புற்றுநோய் ஆபத்து இணைக்கப்பட்டுள்ளது. எனவே இத்தகைய ரசாயனங்களில் வெளிப்படாமல் இருங்கள்.
6. மரபணு காரணங்கள்: பரம்பரை பரம்பரையாக உள்ள மரபணு மாற்றங்கள் காரணமாக தனி நபர்களை கல்லீரல் புற்றுநோய் தாக்குகிறது. சில குறிப்பிட்ட மரபணுக்களில் ஏற்படும் பிறழ்வுகள், மரபணு மாறுபாடுகள் கொண்ட நபர்களுக்கு கல்லீரல் புற்றுநோயை உருவாக்குகிறது.