Outdoor exercise 
ஆரோக்கியம்

திறந்தவெளியில் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் அதிக ஆரோக்கிய நன்மைகள்!

ஜெயகாந்தி மகாதேவன்

ன்-டோர் (In-Door) உடற்பயிற்சி கூடம், ஜிம் மற்றும் வீட்டின் உள்ளே இருந்து உடற்பயிற்சி செய்வதை விட, பார்க், பீச், விளையாட்டு மைதானம் போன்ற காற்றோட்டம் நிறைந்த திறந்தவெளிகளில் உடற்பயிற்சி செய்வது நம் உடல் நலம் மற்றும் மன நலம் இரண்டையும் காக்க பெரிதும் உதவும். திறந்தவெளிகளில் உடற்பயிற்சி செய்வதால் மன நலம் காக்க நாம் பெறக்கூடிய ஆறு ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. அதிகளவு புத்துணர்ச்சி தரக்கூடிய அவுட்-டோர் உடற்பயிற்சிகள் இன்-டோர் பயிற்சிக்கு ஒரு நல்ல மாற்றாக அமைகிறது. இதிலிருந்து ஒரு தனித்துவமான மன ஆரோக்கியம் பெற முடிகிறது. திறந்த வெளிகளில் மேற்கொள்ளும் பயிற்சி உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் ஒரு குறிப்பிடும்படியான முன்னேற்றதைக் கொண்டு வருவதை நம்மால் உணர முடியும்.

2. ஸ்ட்ரெஸ்ஸுடன் தொடர்பு கொண்டுள்ள கார்ட்டிசால் என்னும் ஹார்மோன் உற்பத்தி அளவை கட்டுப்பாட்டிற்குள் வைக்க அவுட்-டோர் உடற்பயிற்சிகள் உதவுகின்றன. இதனால் உடலில் மன அழுத்தம் உண்டாவது தடுக்கப்படுகிறது. ஆரவாரமற்ற திறந்தவெளியில் உடற்பயிற்சி செய்வது மனதுக்குள் இறுக்கமில்லாத அமைதியான உணர்வை உண்டுபண்ண உதவுகிறது.

3. என்டார்ஃபின் என்னும் ‘ஃபீல் குட்’ (Feel Good) ஹார்மோனின் உற்பத்தி அளவை உயர்த்தவும் இந்த திறந்தவெளி உடற்பயிற்சிகள் உதவுகின்றன. இதனால் நம் மன நிலையில் மகிழ்ச்சி அதிகரிக்கிறது.

4. தொடர்ந்து திறந்தவெளியில் உடற்பயிற்சி செய்து வரும்போது இரவில் நம் தூக்கத்தின் இயல்பும் ஆரோக்கியமடைகிறது. உடலும் மூளையும் இணைந்து செயல்புரிந்து ஆழ்ந்த மற்றும் லேசான தூக்கத்திற்குள் சென்று தேவையான ஓய்வும் புத்துணர்ச்சியும் பெறுகின்றன. உடற்பயிற்சியின்போது உடலில் படும் இயற்கை வெளிச்சமானது மூளையின் மாஸ்டர் கிளாக்கை மாற்றி அமைக்கவும் அதன் மூலம் அதிகளவு தூக்கம் பெறவும் உதவுகிறது.

5. திறந்தவெளி செயல்பாடுகள் மூளையின் கூர்நோக்குடன் கூடிய ஈடுபாட்டையும் நினைவாற்றலையும் அதிகரிக்க உதவும். இயற்கையான சூழலில் நேரத்தை செலவழிப்பது நம்முள் இருக்கும் படைப்பாற்றலை ஊக்குவிக்க உதவும்.

6. அவுட்-டோர் உடற்பயிற்சியின்போது பலதரப்பட்ட வெளி மனிதர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கும். அது பயிற்சி வகுப்பில் பங்கு பெறும்போது அல்லது குழுவில் சேர்ந்து செயலாற்றும்போது என எந்த நிலையிலும் நிகழலாம்.

மேற்கூறிய நன்மைகளை மனதில் இருத்தி, புத்துணர்ச்சியும் காற்றோட்டமும் தரக்கூடிய அவுட்-டோர் உடற்பயிற்சிக்கு முன்னுரிமை தரலாமே!

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

SCROLL FOR NEXT