தேன், நெல்லிக்காய் 
ஆரோக்கியம்

அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அன்றாட வைத்தியக் குறிப்புகள்!

பத்மப்ரியா

* தேனீ கடித்த இடத்தில் மஞ்சளும், சுண்ணாம்பும் கலந்து போட, வலியும் வீக்கமும் பறந்துவிடும்.

* பப்பாளிச் செடியின் பாலை வலிக்கும் பல் மீது தடவி வந்தால் பல் வலி குணமாகும்.

* குழந்தைகள் ஞாபக சக்தியுடன் இருக்க வேண்டுமானால் தினமும் காலை உணவுக்குப் பின் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க வையுங்கள்.

* வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுத் தொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் குணமாகும்.

* நூல்கோலைத் துருவி ஊறவைத்து பயத்தம் பருப்பு கலந்து உப்பு பிசறி எலுமிச்சைச் சாறு பிழிந்து சாப்பிட்டால் சர்க்கரை நோய்க்கு அருமருந்தாகும்.

* பொடி செய்த ஓமத்தை பாலில் கலந்து வடிகட்டி படுக்கும் முன் குழந்தைகளுக்குக் கொடுத்தால் சளியை விரட்டும்.

* வெள்ளைப்  பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் சருமத்தில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

* நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

* கரும்பு சக்கையை எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

* மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

* கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

* தீப்புண் ஏற்பட்ட இடத்தில் வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தடவி வந்தால் புண் விரைவில் குணமடையும்.

* சாணி வரட்டியை பற்ற வைத்து அது எரியும்போது மஞ்சள் தூளை தூவி வரும் புகையை நுகர்ந்தால் மூக்கடைப்பு தீரும்.

* ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.

* கொதிக்கும் தண்ணீரில் காப்பித் தூளைப் போட்டு ஆவி பிடிக்க தலைவலி, தலை பாரம் குறையும்.

* புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.

* கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாய்ப்பு புண் குணமடையும்.

* மருதாணி இலையுடன் எலுமிச்சை சாறு விட்டு விழுதாக அரைத்து கால் வெடிப்பில் பூசி வர, கால் வெடிப்பு குணமாகும்.

* காலில் முள் குத்திய இடத்தில் முள்ளை எடுத்த பின் வெற்றிலையில் நல்லெண்ணெய் தடவி அணலில் வாட்டி சூட்டோடு வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் வலி பறந்து விடும்.

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

Alia bhatt beauty tips: நடிகை ஆலியா பட் அழகின் ரகசியம் இதுதான்!

6 Super Cool Facts About The Moon!

SCROLL FOR NEXT