Need and Benefits of Potassium https://ta.quora.com
ஆரோக்கியம்

பொட்டாசியம் சத்தின் தேவையும் பயன்களும்!

ஜெயகாந்தி மகாதேவன்

ம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் கனிமச் சத்துக்களில் முக்கியமானது பொட்டாசியம் சத்து. இது உடலிலுள்ள எலக்ட்ரோலைட்களை சமநிலையில் வைத்து, இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பதும், இதய ஆரோக்கியத்தைக் காப்பதுமான மிக முக்கியத்துவம் வாய்ந்த பணியை சிறப்பாக செய்யக்கூடியது. உயர் இரத்த அழுத்தத்தை உண்டுபண்ணக்கூடிய சோடியத்துக்கு நேர் எதிராக எதிர்வினை புரிகிறது. இரத்தக் குழாய்களின் சுவர்களைத் தளர்த்தி இரத்த  நாளங்களை விரிவடையச் செய்யும். இதன் மூலம் இரத்தக் குழாய்களில் இரத்த ஓட்டம் சீராகச் செல்லும்.

உடலின் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருப்பதில் பொட்டாசியத்தின் பங்கு கணிசமானது. செல்களுக்கு ஊட்டச்சத்துக்களை அனுப்புவது, கழிவுகளை வெளியேற்றுவது போன்ற வேலைகளிலும் இது உதவி புரிகிறது. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பொட்டாசியம் எந்தெந்த உணவுகளில் அதிகம் உள்ளது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

* ஊட்டச்சத்துக்கள் அதிகமுள்ள நடுத்தர சைஸ்  அவகோடாவில் பொட்டாசியத்தின் அளவு சுமார் 700 mg உள்ளது.

* மூன்று அவுன்ஸ் சமைத்த சால்மன் மீன் உணவில் சுமார் 300 முதல் 350 mg வரை பொட்டாசியம் உள்ளது.

* நடுத்தர சைஸ் அளவுள்ள, தோலுடன் பேக் (bake) செய்த உருளைக் கிளங்கில் சுமார் 900 mg பொட்டாசியம் உள்ளது.

* ஒரு கப் சமைத்த பசலைக் கீரையில் 800 mg க்கும் அதிகமாக பொட்டாசியம் உள்ளது.

* அதிக சுவை கொண்ட ஒரு நடுத்தர சைஸ் ஸ்வீட் பொட்டட்டோவில் சுமார் 450 முதல் 500 mg வரை பொட்டாசியம் உள்ளது.

* ஒரு நடுத்தர சைஸ் ஆரஞ்சில் சுமார் 230 mg பொட்டாசியம் உள்ளது.

* ஒரு நடுத்தர சைஸ் வாழைப்பழத்தில் ஏறத்தாழ 400 முதல் 450 mg வரை பொட்டாசியம் சத்து இருக்கிறது.

நிமிர்ந்த நடைக்கு ஆதாரமான முதுகெலும்பை பராமரிக்க 10 எளிய வழிகள்!

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

SCROLL FOR NEXT