ஆரஞ்சு விதைகளில் அந்தப் பழத்தை விட அதிக நன்மைகள் இருக்கின்றன. ஆரஞ்சு விதைகளில் வைட்டமின் C, B6, மெக்னீசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து ஆகிய சத்துக்கள், சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்களாக இந்த விதைகள் திகழ்கின்றன. உடலிலுள்ள கழிவுகளை நீக்க இந்த விதைகள் உதவுகின்றன.
சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளின் சிறந்த மூலமாக இது உள்ளது. அவை நம் உடலை நீரேற்றமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகின்றன. இது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. எனவே, இதை அதிகாலையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளும்போது உங்கள் உடல் ஆற்றல் அளவை உயர்த்துகிறது.
ஆரஞ்சு விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் கூந்தல் பராமரிப்புக்கு சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது. ஆரஞ்சு விதைகளில் வைட்டமின் சி மற்றும் பயோஃபிளாவனாய்டுகள் இருப்பது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. இது ஆரோக்கியமான மற்றும் வலுவான கூந்தலை உருவாக்க உதவுகிறது. ஆரஞ்சு விதைகளில் உள்ள ஃபோலிக் அமிலம் முடி வளர்ச்சியை துரிதப்படுத்தவும், வேர் கால்களிலிருந்து அவற்றை வலுப்படுத்தவும் உதவுகிறது. ஆரஞ்சு எண்ணெய் இல்லாவிட்டாலும் கூட, வெறும் ஆரஞ்சு விதைகளை அரைத்து தலைக்கு கண்டிஷனராகப் பயன்படுத்தலாம் அல்லது இந்த விதைகளை உலர்த்தி அரைத்து பவுடராக்கி வைத்துக்கொண்டால் ஹேர் பேக்காகவும் பயன்படுத்தலாம்.
ஆரஞ்சு விதைகள் பித்த உடம்பு கொண்டவர்களுக்கு அருமையான ஒரு மருந்து. இந்த விதைகளை பழத்துடன் சேர்த்து கடித்து உண்பதால் பித்தம் தணியும். காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் நாக்கில் கசப்புத் தன்மை குறைய ஆரஞ்சு விதையைப் பவுடராக்கி, பனங்கற்கண்டுடன் சேர்த்து சாப்பிட்டால் நாக்கில் கசப்பு சுவை குறையும்.
ஆரஞ்சு விதை பவுடர், வேப்பிலை பவுடர், துளசி இலை பவுடர் இம்மூன்றையும் கலந்து வைத்துக் கொண்டு, தினமும் காலையில் இந்தப் பொடியால் பல் தேய்த்து வந்தால் பற்களின் மஞ்சள் கறை நீங்கி பற்கள் பளிச்சிடும்.
உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள் ஆரஞ்சு விதை பொடியுடன் சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராவதுடன் இரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டில் இருக்கும்.