Tomato 
ஆரோக்கியம்

இது மட்டும் தெரிஞ்சா உங்க உணவுகளில் தக்காளி அதிகமா சேர்க்க மாட்டீங்க!

கிரி கணபதி

தக்காளி, உலகளாவிய அளவில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு காய்கறி. இது பல உணவுகளுக்கு சுவை மற்றும் நிறத்தை சேர்க்கிறது. இதில் அதிக அளவில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இருப்பினும், அளவுக்கு மீறி எந்த உணவை உட்கொண்டாலும் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது நாம் அறிந்ததே. தக்காளியும் இதற்கு விதிவிலக்கல்ல.

தக்காளியின் நன்மைகள்:

  • தக்காளியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

  • தக்காளிக்கு அதன் சிவப்பு நிறத்தை வழங்கும் லைகோபீன், ஒரு சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும். இது புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடவும், இதய நோய்களின் அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது.

  • தக்காளியில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி, நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும் உணர்வைத் தருகிறது.

  • இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தக்காளியில் உள்ள பொட்டாசியம் உதவுகிறது.

தக்காளி ஏற்படுத்தும் பிரச்சினைகள்:

1. அசிடிட்டி:

  • தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால், அதிகமாக உட்கொள்ளும்போது அமிலத்தன்மை அதிகரித்து, நெஞ்செரிச்சல், வயிற்று எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். குறிப்பாக, ஏற்கனவே அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் தக்காளியை குறைவாகவே உட்கொள்ள வேண்டும்.

2. வாயு பிரச்சனை:

  • தக்காளியில் உள்ள சில கூறுகள் வயிற்றில் வாயுவை அதிகரிக்கச் செய்யும். வயிற்றுப்புண் அல்லது IBS போன்ற செரிமான பிரச்சினைகள் உள்ளவர்கள் தக்காளியைத் தவிர்க்க வேண்டும்.

3. சிறுநீரக கற்கள்:

  • தக்காளியில் ஆக்ஸலேட் எனப்படும் ஒரு பொருள் உள்ளது. இது சிறுநீரகக் கற்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. சிறுநீரகப் பிரச்சினைகள் உள்ளவர்கள் தக்காளியை முற்றிலுமாகக் தவிர்க்க வேண்டும்.

4. நெஞ்செரிச்சல்:

  • தக்காளியில் உள்ள அமிலம் நெஞ்செரிச்சலை அதிகரிக்கச் செய்யும். குறிப்பாக, இரவு உணவிற்குப் பிறகு தக்காளியை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். சிலருக்கு தக்காளி ஒவ்வாமை இருக்கலாம். இது தோல் வெடிப்பு, இருமல், தும்மல், தொண்டையில் அரிப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.

6. மூட்டு வலி:

  • தக்காளியில் உள்ள சோலனைன் என்ற பொருள் மூட்டு வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். அதிக அளவு தக்காளியை உட்கொள்வது நச்சுத்தன்மையை ஏற்படுத்தி, தொண்டை மற்றும் வாய் எரிச்சல், தலைச்சுற்றல் உள்ளிட்டவற்றிற்கு வழிவகுக்கும்.

தக்காளி, பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் ஒரு காய்கறி என்றாலும், அதை மிதமாகவே உட்கொள்ள வேண்டும். ஏற்கனவே ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால், தக்காளியை உட்கொள்வதற்கு முன் மருத்துவரை அணுகுவது நல்லது.

கணவன் மனைவி இந்த 7 விஷயங்களில் வெளிப்படையாக இருக்க வேண்டும்! 

ஆந்திரப் பிரதேசத்தின் புவிசார் குறியீடு பெற்ற பாரம்பரிய இனிப்பு ஆத்ரேயபுரம் பூதரெகுலு!

இந்த கண்ணாடி உங்களை தூங்க விடாது!

மஸ்குலர் டிஸ்டிராபியின் காரணமும் தீர்வும்!

நுரையீரலுக்கு நன்மை செய்யும் நொச்சி இலை பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT