இன்று இந்த பதிவில் மைதா பயன்படுத்தி செய்யப்படும் உணவை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பது பற்றி நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம். மைதா என்பது கேக், குக்கீஸ், பரோட்டா மற்றும் ரொட்டி போன்ற சுவையான உணவுகளை தயாரிக்க பயன்படும் ஒரு மாவு வகை. இந்த உணவுகள் சுவையாக இருந்தாலும் அவை நம் உடலுக்கு ஆரோக்கியமானது இல்லை. அது ஏன் தெரியுமா?
மைதா என்றால் என்ன?
மைதா என்பது கோதுமை தானியத்தின் சில முக்கிய பகுதிகளை நீக்கி தயாரிக்கப்படும் ஒரு வெள்ளை மாவு ஆகும். இது கோதுமையில் இருந்து நீக்கப்படுவதால்தான் கோதுமை மாவு ஆரோக்கியமானதாக மாறுகிறது. மைதா மாவின் சுவை தனித்துவமானதாக இருப்பதால், அதைப் பயன்படுத்தி பல உணவுகள் செய்கிறார்கள். ஆனால் கோதுமை மாவில் இருக்கும் அதே சத்துக்கள் மைதாவில் இருப்பதில்லை.
மைதா உணவுகளை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?
சிலருக்கு கோதுமை ஒவ்வாமை இருக்கும், அவர்கள் மைதா உணவுகளை உண்ணும்போது உடல் நல பாதிப்புகள் ஏற்படும். எனவே கோதுமை ஒவ்வாமை உள்ளவர்கள் மைதா மாவில் செய்த உணவுகளை சாப்பிடும்போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இவர்கள் மைதா உணவுகளை தவிர்ப்பது நல்லது.
மைதாவில் குளூட்டன் என்ற புரதம் உள்ளது. இது சிலருக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஒருவருக்கு குளூட்டன் அலர்ஜி அல்லது செலியாக் நோய் எனப்படும் ஒரு நிலை இருந்தால், மைதா உணவுகள் சாப்பிடுவது அவர்களது உடல்நிலையை மோசமாக்கலாம். எனவே இத்தகையவர்களுக்கு மைதா உணவுகள் ஏற்றதல்ல.
உங்களுக்கு கோதுமை ஒவ்வாமை அல்லது குலுடன் அலர்ஜி இல்லாவிட்டாலும் மைதா உணவுகளை உட்கொள்வதை கட்டுப்படுத்துவது நல்லது. மைதாவில் பொதுவாக சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகமாக உள்ளன. இது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். மைதாவை அதிகமாக உண்பதால் உடல் எடை கூடுமே தவிர, உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்காது. எனவே மைதா உணவுகளை மாதம் ஒன்று அல்லது இருமுறை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். முடிந்தால் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
மைதா உணவுகள் சாப்பிடு சுவையாக இருந்தாலும் அவை நம் உடலுக்கு நல்லதல்ல. குறிப்பாக ஒவ்வாமை பாதிப்பு இருப்பவர்கள் மைதாவை தவிர்க்க வேண்டும். மேலும் என்றும் ஆரோக்கியமாக இருக்க விரும்புபவர்கள் மைதாவைத் தவிர்த்து, ஆரோக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் புரதம் நிறைந்த சமநிலையான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.