Seven drinks that help you lose fat
Seven drinks that help you lose fat https://www.onlymyhealth.com/
ஆரோக்கியம்

கொழுப்பைக் குறைக்க உதவும் ஏழு பானங்கள்!

ஜெயகாந்தி மகாதேவன்

ம்மில் பலர் கொழுப்பு என்றாலே அது உடலுக்குத் தேவையில்லாத ஒன்றென எண்ணுகின்றனர். கொழுப்பில், நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு என இரண்டு வகை உண்டு. இதில் நல்ல கொழுப்பு உடலுக்கு பல்வேறு நன்மைகளைச் செய்கிறது. கெட்ட கொழுப்பு அதிகமாகும்போது மாரடைப்பு போன்ற பிரச்னைகளை உண்டுபண்ணுகிறது. அதிகப்படியான நல்ல கொழுப்பையும் LDL என்னும் கெட்ட கொழுப்பையும் குறைக்க நாம் அருந்த வேண்டிய ஏழு வகை பானங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

* க்ரீன் டீயில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் கேட்டசின்ஸ் என்ற கூட்டுப்பொருளும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகின்றன.

* தக்காளி ஜூஸ் குடிப்பதால் அதிலுள்ள லைகோபீன் (Lycopene) என்ற பொருள் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கிறது.

* ஓட்ஸ் கஞ்சி குடிப்பதால் அதிலுள்ள பீட்டா க்ளுகன் என்ற பொருள் ஒருவித ஜெல்லை உண்டுபண்ணி குடலின் உள்பக்கத்தில் படியச் செய்கிறது. அதன் மூலம் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவது தடைபடுகிறது.

* தாவரங்களிலிருந்து எடுக்கப்படும் பொருளை மூலமாகக் கொண்டு தயாரிக்கப்படும் பாதம் பால் போன்றவற்றை அருந்துவதால் தேவைக்கு அதிகமாக உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க முடியும். மேலும், அதிலுள்ள பாலி அன்சாச்சுரேடட் கொழுப்பு அமிலமானது கெட்ட கொழுப்பின் அளவையும் குறைக்க உதவுகிறது.

* அன்தோசியானின் (Anthocyanin) என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் நார்ச்சத்துக்கள் கொண்ட பல வகை பெர்ரி பழங்களை உபயோகித்து தயாரிக்கப்படும் ஸ்மூத்தியை உட்கொள்ளுவதால் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க முடியும்.

* கோகோ (Cocoa)விலுள்ள ஃபிளவனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கக் கூடியது. கோகோ சேர்த்து தயாரிக்கப்படும் பானங்கள் அருந்துவது நன்மை பயக்கும்.

* பசலை கீரை ஜூஸ் அருந்துவதாலும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க முடியும். அதிலுள்ள நார்ச் சத்துக்கள் உடல் கொழுப்பை உறிஞ்சும் அளவை குறையச் செய்கின்றன.

மேற்கூறிய ஆரோக்கிய பானங்களை அருந்தி கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைப்போம். கஷ்டமின்றி வாழ்வோம்.

அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்க செய்யக்கூடிய 9 எளிய விஷயங்கள்!

கைவசம் வசம்பு... இனி நோ வம்பு!

பாகுபாலி பிரபாஸுக்கு திருமணமா? இன்ஸ்டா ஸ்டோரி வைரல்!

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் அறிவோம்!

உங்க உடலில் அதிகமாக உப்பு இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள்!  

SCROLL FOR NEXT