தோள்பட்டை என்பது உடலின் மிகவும் இயக்கத்திற்குரிய பகுதிகளில் ஒன்றாகும். இது நாம் செய்யும் பல அன்றாட செயல்களுக்கு முக்கியமானது. ஆனால், நமது நவீன வாழ்க்கை முறை பெரும்பாலும் நாற்காலியிலேயே உட்காந்து வேலை செய்வதையும், குறைந்த உடல் செயல்பாட்டையும் உள்ளடக்கியுள்ளதால் தோள்பட்டை பகுதி பலவீனம் அடையலாம். தோள்பட்டை பகுதியை வலுப்படுத்துவதற்கு தகுந்த வழிகாட்டுதலின் கீழ் முறையான உடற்பயிற்சிகள் செய்வது அவசியம்.
நல்ல ரிசல்ட் கொடுக்கும் தோள்பட்டை உடற்பயிற்சிகள்:
சோல்டர் உடற்பயிற்சிகளை செய்வதற்கு முன் ஒரு உடற்பயிற்சி நிபுணரை அணுகி உங்கள் உடல்நிலைக்கு ஏற்ற உடற்பயிற்சி திட்டத்தை உருவாக்கிக் கொள்வது நல்லது. பின்வரும் உடற்பயிற்சிகள் தோள்பட்டை பகுதியை வலுப்படுத்த உதவும்.
Shoulder Press: ஒரு பென்சில் உட்கார்ந்து அல்லது தரையில் நின்று கொண்டு ஒவ்வொரு கையில் ஒரு தம்பெல்லை எடுத்து கைகளை தோள்பட்டைக்கு நேராக உயர்த்தவும். கைகளை முழுமையாக நீட்டி சில வினாடிகள் பிடித்து பின்னர் மெதுவாக கீழே இறக்கவும்.
Lateral Raise: கால்களை தோள்பட்டை அகலத்தில் வைத்து நின்று கொள்ளுங்கள். பின்னர் ஒவ்வொரு கையிலும் ஒரு தம்பெல்லை எடுத்து கைகளை பக்கவாட்டில் உயர்த்தவும். கைகளை தோள்பட்டைக்கு இணையாக உயர்த்தி சில வினாடிகள் பிடித்து பின்னர் எதுவாக கீழே இறக்கவும்.
Front Raise: இந்த உடற்பயிற்சி செய்வதற்கு கால்களை தோள்பட்டை அகலத்தில் வைத்து நின்று கொண்டு, ஒவ்வொரு கையிலும் ஒரு தம்பெல்லை எடுத்து கைகளை முன்னோக்கி உயர்த்தவும். கைகளை தோள்பட்டைக்கு இணையாக உயர்த்தி சில வினாடிகள் பிடித்து பின்னர் மெதுவாக கீழே இறக்கவும்.
Row: ஒரு பெஞ்சில் முகம் கீழாக படுத்து ஒவ்வொரு கையில் ஒரு தம்பெல்லை எடுத்து கைகளை உடலுக்கு இணையாக உயர்த்தவும். கைகள் தோள்பட்டைக்கு இணையாக உயர்த்தி சில வினாடிகள் அப்படியே பிடித்து பின்னர் மெதுவாக கீழே இறக்கவும்.
தோள்பட்டை உடற்பயிற்சிகள் செய்யும்போது கவனிக்க வேண்டியவை:
உடற்பயிற்சி செய்வதற்கு முன் 5-10 நிமிடங்கள் வார்ம் அப் செய்யவும். இது தசைகளை வெப்பப்படுத்தி காயம் ஏற்படும் அபாயத்தை குறைக்கும். உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு 10 நிமிடங்கள் ஓய்வு எடுக்கவும். இது தசைகளை இறுக்கமாக்கி வலிமையாக்க உதவும்.
உடற்பயிற்சிகளை சரியான முறையில் செய்யுங்கள். தவறாக செய்வது காயம் ஏற்பட வழிவகுக்கும். உங்களுக்கு ஏற்ற எடையைத் தேர்ந்தெடுக்கவும். அதிக எடை தூக்குவது காயத்தை உண்டாக்கலாம். ஒவ்வொரு பயிற்சியையும் நன்கு வலி தெரியும் அளவுக்கு மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும். ஒவ்வொரு செட்டிற்கும் இடையே 2 நிமிடங்கள் கட்டாயம் ஓய்வு எடுக்கவும்.
இவற்றை நீங்கள் முறையாகப் பின்பற்றி சோல்டர் பயிற்சிகளை மேற்கொண்டால், நீங்கள் எதிர்பார்க்கும் ரிசல்ட் சிறப்பாகக் கிடைக்கும்.