சித்த மருத்துவம்... 
ஆரோக்கியம்

நெஞ்சில் சளியா? சித்த மருத்துவம் சொல்வதென்ன? விளக்குகிறார் சித்த மருத்துவர் நந்தினி சுப்ரமணியம்!

கல்கி டெஸ்க்

லர்ஜியினாலோ அல்லது கிருமி தொற்றினாலோ நெஞ்சு சளி, இருமல், தொண்டை கரகரப்பு  போன்ற அறிகுறிகள் இருந்தால் எளிமையான முறையில் அவற்றைச் சரிசெய்ய சித்த மருத்துவத்தில் தொன்மையான மருந்துகள் உள்ளன. இவை ஆச்சரியப்படும் வகையில் நோயையும், அறிகுறிகளையும் மிக விரைவாக குணப்படுத்தும் சக்தி கொண்டவை.

சித்த மருத்துவர் நந்தினி சுப்ரமணியம்.

‘அகத்தியர் இரத்தின சுருக்கம்’ என்ற சித்த மருத்துவ நூலில் ‘தாளிசாதி சூரணம்’ நெஞ்சுசளிக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இச் சூரணம் தாளிசபத்திரி, சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலரிசி போன்ற மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்டு சித்த மருந்தகங்களில் கிடைக்கும். இம்மருந்து சூரணமாகவும், மாத்திரை யாகவும் கிடைக்கும். காலை மாலை இருவேளை உணவுக்கு பின் 500 mg உட்கொள்ள, வைரஸ் தொற்று, நெஞ்சு சளி, இருமல் தீரும்.

‘அகத்தியர் பரிபூரணம்’ என்ற சித்த மருத்துவ நூலின்படி சுண்டைக்காய் அளவு ‘திப்பிலி இரசாயனம்’ காலை மாலை உணவு  உண்டபின் உட்கொள்ள ஆஸ்துமா மூச்சிறைப்பு, தொடர் இருமல், வரட்டு இருமல் தீரும்.

சளி கெட்டியாக உள்ளபோதும், மஞ்சள் அல்லது பச்சை நிறமாக இருக்கும்போதும், தொண்டைக்கட்டிற்கும் நாம் ஆடாதோடையை மருந்தாகப் பயன்படுத்தலாம். ‘ஆடாதோடைக்கும் ஐந்தாறு மிளகுக்கும் பாடாத வாயும் பாடும் என்பது பழமொழி.

1925ல் கொல்கத்தாவில் உள்ள கார்மீசேள் மருத்துவமனையில் ஆடாதோடையை நோய்யுற்றவர் களுக்குக் கொடுத்து ஆய்வு நடத்தியதில், அது கெட்டியான சளியை கரைக்கும் (expectorant) தன்மையை பெற்றுள்ளது என்பது நிரூபிக்கப்பட்டது. அதில் உள்ள ‘Vasicine’ (வாசிசின்) என்ற ஆல்கலாய்டுகளே அவ்வேலையைச் செய்கிறது.

நெஞ்சில் சளியா...

நம் கிராமங்களில் தோட்டத்திற்கு உயிர்வேலியாக பயன்பதுத்தப்படும் ஆடாதோடை நம் உயிரை காக்கும் வேலியாகவும் இருக்கும் என்றால் அது மிகையாகாது.

சுவாசப்பாதையில் உள்ள இறுக்கத்தைப் போக்கி இருமலைத் தூண்டும் நரம்புகளைச் சாந்தப்படுத்தும் தன்மைகொண்டது.

ஆஸ்துமாவிற்காக நவீன மருத்துவத்தில் பயன்படுத்தும் தியோபிலின்க்கு ஒத்த (theophylline) செய்கை கொண்டது ஆடாதோடை. ஆனால், உடல் நடுக்கம் என்ற பக்கவிளைவு இல்லாமல் மூச்சிரைப்பைக் குணப்படுத்தும் உயரிய மூலிகை ஆடாதோடை.

‘அஷ்டாங்க இருதய’ என்ற நூலில் இது ஒரு சிறந்த சளி இளக்கியாக செயல்படும் என்ற குறிப்பு உள்ளது. மூக்கடைப்பைப் போக்கும் (decongestant) தன்மையும் கொண்டது.

நுரையீரலில் உள்ள நச்சுக்களை வெளித்தள்ளி சுவாசத்தைச் சுகமாக்கும் ஆடாதோடை ஒரு அற்புத மூலிகையாகும். அளவு அதிகமாக உட்கொண்டால் வாந்தியை உண்டாக்கும்.

ஆடாதோடை இலை பொடி 2 gm, தாளிசபத்ரி பொடி 1 gm, திரிகடுகு 1 gm, கடுக்காய் 1 gm சேர்த்து 200 ml நீரில் கொதிக்கவைத்து 50 ml ஆக வற்றவைத்து வடிகட்டி தேன் சேர்த்து குடிக்க, நெஞ்சு சளி தீரும்.

குழந்தைகளுக்கு அதிமதுரம் தேனோடு சேர்த்து 250 mg அளவு கொடுக்கலாம். துளசி, கற்பூரவள்ளி, முசுமுசுக்கை, முருங்கைக்கீரை இவற்றில் ஏதாவது ஒரு சாறு எடுத்து 10 ml சாற்றுடன் 3 மிளகு மற்றும் தேன் அல்லது கல்லுப்பு சேர்த்து கொடுக்க வாந்தி அல்லது மலத்தோடு சளி வெளியாகும்.

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

SCROLL FOR NEXT