Signs that someone is stressed. 
ஆரோக்கியம்

ஒருவர் மன அழுத்தத்தில் இருப்பதற்கான அறிகுறிகள்! 

கிரி கணபதி

நவீன வாழ்க்கை முறையில் மன அழுத்தம் என்பது ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. வேலை, பணம், குடும்பம் மற்றும் உறவுகள் போன்ற பல்வேறு காரணிகளால் மன அழுத்தம் ஏற்படலாம். சிறிதளவு மன அழுத்தம் ஏற்படுவது நமக்கு உந்துதலாக இருக்கலாம் என்றாலும் அதிக அளவு மன அழுத்தம் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். உங்கள் உடல் மிகவும் மன அழுத்தத்தில் இருப்பதற்கான சில பொதுவான அறிகுறிகளைத் தெரிந்துகொண்டு, அதை எப்படி சரி செய்வது என இப்பதிவில் பார்க்கலாம். 

உடல் அறிகுறிகள்:

  • சோர்வு

  • தலைவலி

  • தசை பிடிப்பு அல்லது வலி

  • வயிற்று வலி அல்லது செரிமானப் பிரச்சினைகள்

  • மார்பு வலி அல்லது இதய துடிப்பு அதிகரிப்பு

  • அதிக வியர்வை

  • பசியின்மை அல்லது அதிக பசி

  • தூங்குவதில் சிரமம்

உணர்ச்சி அறிகுறிகள்:

  • எரிச்சல்

  • கவலை

  • மனச்சோர்வு

  • கவனம் செலுத்துவதில் சிரமம்

  • முடிவெடுப்பதில் சிரமம்

  • மனம் அமைதியின்றி தவிப்பது

  • தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு

நடத்தை அறிகுறிகள்:

  • போதைப்பொருள் அல்லது ஆல்கஹால் போன்றவற்றிற்கு அடிமையாதல்

  • புகைபிடித்தல்

  • அதிகமாக சாப்பிடுதல் அல்லது குறைவாக சாப்பிடுதல்

  • உடற்பயிற்சி செய்வதை தவிர்ப்பது

  • வேலை அல்லது பள்ளியில் கவனம் செலுத்துவதில் சிரமம்

  • சமூக சூழ்நிலைகளைத் தவதவிர்ப்பது

மன அழுத்தத்தை எவ்வாறு சமாளிப்பது: 

முதலில் உங்கள் மன அழுத்தத்திற்கு என்ன காரணம் என்பதை அறிந்து கொள்வது முக்கியம். அது உங்கள் வேலையாக இருக்கலாம், பண தேவை, உங்கள் உறவுகள் அல்லது வேறு ஏதாவது காரணமாக இருக்கலாம். முதலில் அதன் காரணத்தை அறிந்தால் மட்டுமே அதை சமாளிப்பதற்கான நடவடிக்கை எடுக்க முடியும். 

போதுமான தூக்கம் ஆரோக்கியமான உணவு உட்கொள்வது மற்றும் உடற்பயிற்சி செய்வது போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள். இவை உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். 

சுவாசப் பயிற்சி தியானம் மற்றும் யோகா போன்ற மன அழுத்த மேலாண்மை நுட்பங்களை முயற்சிக்கவும். 

நீங்கள் அதிகமான அழுத்தத்தை உணர்ந்தால், அதை உங்களாலேயே சமாளிக்க முடியவில்லை என்றால் ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் உதவி கோர தயங்க வேண்டாம். இது உங்களது பிரச்சனைகளை விரைவில் சரி செய்ய உதவும். 

இன்றைய காலத்தில் மன அழுத்தம் என்பது அனைவருக்குமே ஏற்படும் ஒரு சாதாரண விஷயமாக மாறிவிட்டது. இருப்பினும் இதன் தாக்கத்தை பெரும்பாலானவர்கள் கண்டுகொள்வதில்லை. தொடக்க நிலையிலேயே இதன் அறிகுறிகளை அறிந்து சரி செய்யாவிட்டால், பல பிரச்சினைகளை கொண்டுவரும். எனவே மன அழுத்தம் சார்ந்த விஷயங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT