Stomach Ulcer Home Remedies Image Credits: Boldsky Hindi
ஆரோக்கியம்

வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே அல்சரை போக்க எளிய வழிமுறைகள்!

நான்சி மலர்

ல்சர் என்பது வயிற்றில் அல்லது சிறுகுடலில் ஏற்படும் புண்ணாகும். சிறுகுடலிலே ஏற்படும் அல்சரை Duodenal ulcer என்று கூறுவார்கள். வயிற்றில் ஏற்படும் அல்சரை Gastric ulcer என்று கூறுவார்கள். இந்த பதிவில் வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து அல்சரை போக்குவது எப்படி என்பதைப் பற்றிக் காண்போம்.

அல்சர் இருந்தால் உணவு சாப்பிடுவதிலும், தண்ணீர் அருந்துவதிலும் சிரமம் ஏற்படும். வயிற்றுவலி ஏற்படும், வயித்தெரிச்சல், Bloating ஆகிய அறிகுறைகளை வைத்து அல்சர் இருப்பதைக் கண்டுப்பிடித்து விடலாம். நம் வீட்டில் உள்ள பொருட்களே அல்சரைக் குணப்படுத்த அருமருந்தாக பயன்படுகிறது.

1. ப்ரோபையாடிக் உணவுகள்: புரோபையாடிக் உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது அது வயிற்றில் உள்ள அல்சரை சரிசெய்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அல்சர் உண்டாக காரணமாக இருக்கும்  Pylori bacteria வை அழிக்க உதவுகிறது. Yogurt , Fermented foods, Probiotic supplements ஆகியவற்றை எடுத்துக்கொள்வதால் அல்சர் விரைவில் குணமாகும்.

2. பழங்கள்: நிறைய பழங்களில் flavonoids என்னும் காம்பவுண்ட் உள்ளது. இந்த Flavonoids என்பது வேறு எதுவுமில்லை Polyphenols ஆகும். இது அல்சரை குணப்படுத்த வெகுவாக உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் செரிமான பிரச்னை, டையேரியாவை குணப்படுத்துகிறது. ஆப்பிள், ப்ளூ பெர்ரி, செர்ரி, லெமன், ஆரஞ்ச்ஆகிய பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது.

3. தேன்: தேன் ஒரு சிறந்த இயற்கையாக கிடைக்கக்கூடிய இனிப்பு பொருளாகும். ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகமாக இருக்கும் தேன் கண் மற்றும் இதய சம்பந்தமான நோயையும் குணப்படுத்த உதவுகிறது. தொடர்ந்து தேன் சாப்பிட்டு வருவதால்,  சீக்கிரமாக அல்சர் குணமாகும். தேனுக்கு இயற்கையாகவே காயங்களை குணப்படுத்தும் தன்மை உண்டு. தோலில் ஏற்பட்ட காயம், புண் மற்றும் தீக்காயத்தை குணப்படுத்தும் தன்மை உடையது.

4. மஞ்சள்: மஞ்சள் மிகவும் பிரபலமான உணவுப்பொருளாகும். மஞ்சளில் Curcumin என்னும் காம்பவுண்ட் உள்ளது. இதில் அழற்சி எதிர்ப்பு தன்மை மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளதால் இது அல்சரை குணமாக்க உதவுகிறது.

5. பூண்டு: நம் அன்றாட வாழ்வில் உணவில் பயன்படுத்தும் பூண்டில் ஆன்டி மைக்ரோபியல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் தன்மை உள்ளதால், நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும். இது அல்சர் உருவாவதை தடுத்து அதை விரைவில் குணப்படுத்தவும் உதவுகிறது.

6. கற்றாழை: கற்றாழையை அழகு சாதனப் பொருளாகவும், உணவுக்கும் பயன்படுத்துகிறோம். இது ஆன்டி பாக்டீரியல் மற்றும் காயத்தை குணப்படுத்தும் தன்மையைக்கொண்டது.  கற்றாழையை உண்பதால் அல்சர் குறைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அல்சர் உள்ளவர்கள் உண்ணக்கூடாத உணவுகள் பால், ஆல்கஹால், காபி, குளிர்பானம், கார உணவுகள், கொழுப்பு உணவுகளை தவிப்பது சிறந்தது.

அந்தமான் தீவுகள் பற்றிய சுவாரசியமான 15 தகவல்கள்!

ஞானியைப்போல எப்போது வாழ முடியும் தெரியுமா?

கோதுமை மாவு Vs மைதா மாவு: உடலுக்கு ஆரோக்கியமானது எது?

ஐ.சி.எஃப் - சென்னையின் தலைசிறந்து விளங்கும் பெரும் தொழில் அடையாளங்களில் ஒன்று!

உலகப் புகழ் மாமல்லபுத்தில் அவசியம் கண்டு ரசிக்க வேண்டிய 10 அரிய இடங்கள்!

SCROLL FOR NEXT