https://amudam.com
ஆரோக்கியம்

மூட்டு வலிகளைக் குறைக்கும் சில ஆரோக்கிய உணவுகள்!

மகாலெட்சுமி சுப்ரமணியன்

ளம் வயதினரும் கூட இன்று மூட்டு வலியால்‌அவதியுறுவதை பார்க்கிறோம். அவர்கள் அடிக்கடி சில உணவுகளை தவறாமல் சேர்த்துக்கொள்ள மூட்டு வலி வருவதை குறைப்பதுடன், வலி வந்தாலும் விரைவில் நிவாரணம் பெறலாம்.

சைவ உணவு உண்பவர்கள் ஒமேகா 3, சோயா பீன்ஸ் பருப்புகள் மூலம் கால்சியம், வைட்டமின் டி ஆகியவை கிடைக்கப் பெற்று ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். இவை மூட்டு வலியை குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. பசலைக்கீரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கால்சியம், இரும்புச்சத்து கிடைக்கும்.

அசைவ உணவில் மீன் உணவு உடலுக்குத் தேவையான சத்துக்களைக் கொடுக்க வல்லது. வஞ்சிரம், சார்டைன் ஆகிய மீன்களில் உள்ள ஒமேகா3 எனும் கொழுப்பு அமிலம் மூட்டுவலியை குறைப்பதில் மிகவும் சக்தி வாய்ந்தது.

உடல் எடையை குறைக்க கால்சியம் அதிகமுள்ள கேழ்வரகு, கீரை வகைகள், நட்ஸ்‌ எடுத்துக்கொள்ள மூட்டு வலி வராது. ரெகுலராக உடற்பயிற்சி, நடைபயிற்சி, சூரிய ஒளி படுமாறு இருத்தல் போன்றவை உடல் ஆரோக்யத்தை காத்து மூட்டுவலி போன்ற பிரச்னைகளிலிருந்து நம்மை பாதுகாக்கும்.

முருங்கைச்சாறு 20 மி.லி.யுடன் அதே அளவு பீட்ரூட் அல்லது வெள்ளரிச்சாறு கலந்து அருந்த, வலி பெருமளவு குறையும். மூட்டு வலியுடன் எரிச்சலும் இருந்தால் அதைக் குறைக்க அன்னாசிப் பழச்சாறு அருந்தலாம். ஆப்பிள், கொண்டைக் கடலை போன்றவை மூட்டு வலியைக் குறைக்கும். இரவில் செம்பு பாத்திரத்தில் கைப்பிடியளவு எள்ளைப் போட்டு காலையில் அந்த நீரை அருந்தி வர நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். வெல்லம் கலந்த எள் உருண்டைகளை சாப்பிட்டு வர, மூட்டு வலிக்கு நல்ல பலன் கிடைக்கும். இவை எலும்பு, தசைகளை வலுவாக்கி நல்ல ஆரோக்யத்தைத் தரும்.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT