பெண்களுக்கு ஏற்படும் பல பிரச்னைகளில் வெள்ளைப்படுதலும் ஒன்று. இது பெண்களை பலவீனப்படுத்துவதோடு, பல அசெளகரியங்களையும் தருகிறது. இதை எளிதாக குணமாக்க சில ஆலோசனைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
* வெந்தயத்தை ஊற வைத்து, அந்த நீரை அருந்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். ஊறிய வெந்தயத்தையும் சாப்பிட உடல் சூடு குறைவதுடன், வெள்ளைப்படுதலும் குறையும்.
* தண்டுக்கீரையின் தண்டுகளை மட்டும் சூப் வைத்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் படிப்படியாக குறைவதோடு, இனப்பெருக்க உறுப்புகளும் பலமடையும்.
* வெள்ளைப்பூசணிச் சாறு வெள்ளைப்படுதலை குறைக்க உதவும் சிறந்த நிவாரணி. மதிய வேளையில் தினமும் ஒரு கப் சாப்பிட்டு வர, நல்ல பலன் கிடைக்கும்.
* சோற்றுக் கற்றாழை ஜெல்லை நீரில் நன்கு அலசி மோருடன் அரைத்து குடித்தால் உடல் சூடு தணிந்து வெள்ளைப்படுதல் ஒரே நாளில் கட்டுக்குள் வரும். கூடவே கற்றாழை ஜெல்லை அரைத்து அந்த பகுதியில் பூசி கழுவி வர நல்ல குணம் கிடைக்கும்.
* வேப்ப மரப் பட்டை மற்றும் சீரகத்தை காய வைத்து அரைத்துக்கொள்ளவும். வெள்ளைப்படுதல் பிரச்னை இருக்கும்போது இந்த பொடியில் தேவையான அளவு எடுத்து தண்ணீரில் குழைத்து பேஸ்ட்டாக்கி அதை அந்தரப்பகுதியில் போட்டு பின் கழுவிட கிருமிகள் அழிந்து வெள்ளைப்படுதல் பிரச்னை பெருமளவு குறைத்து விடும்.
* மாம்பட்டை மற்றும் மாங்கொட்டை இரண்டையும் அரைத்து அங்கு பூசி பின் கழுவிட நல்ல குணம் கிடைக்கும்.
* செம்பருத்தி பூக்களை காய வைத்து பொடியாக்கி அதில் கஷாயமாகவோ, தேநீர் ஆகவோ அருந்தி வர வெள்ளைப்படுதல் குணமாகும்.
அந்தரங்கப் பகுதியை நன்கு சுகாதாரமாக வைத்துக்கொள்ள, சமச்சீரான உணவுகளை சாப்பிட வெள்ளைப்படுதல் இருக்காது. தேவைப்பட்டால் மகளிர் மருத்துவரை சந்தித்து அவர் ஆலோசனைப்படி லோஷன், க்ரீம், மாத்திரைகள் எடுத்துக்கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.