some tips to avoid high blood pressure 
ஆரோக்கியம்

உயர் இரத்த அழுத்தப் பிரச்னையிலிருந்து தப்பிக்க சில யோசனைகள்!

பொ.பாலாஜிகணேஷ்

ர்க்கரை வியாதி எப்படி நிறைய பேருக்கு இருக்கிறதோ, அதேபோல் உயர் இரத்த அழுத்தமும் நம்மில் பலருக்கும் உண்டு. இதை சைலன்ட் கில்லர் என்று சொல்வார்கள். அது நமக்குள் வருவதே தெரியாது. அது முற்றிய நிலையில்தான் நமக்குத் தெரியவரும்.

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவதே உயர் இரத்தம் அழுத்தம் ஏற்பட முக்கிய காரணம் ஆகும். நீங்கள் உடல் பருமனாக இருந்தாலோ, அதிக உப்பு எடுத்துக் கொண்டாலோ, மன அழுத்தம் அதிகமாக வைத்திருந்தாலோ அல்லது உடற்பயிற்சி செய்யாத ஒரு நபராக இருந்தாலோ உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஒருசிலருக்கு வயது காரணமாகவும் அல்லது குடும்ப தலைமுறை காரணமாகவும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படலாம். தலைவலி, மங்கலான பார்வை, குமட்டல், மூக்கில் இருந்து ரத்தம் வடிதல், மயக்கம், நெஞ்சுவலி, வலிப்பு மற்றும் மூச்சுத் திணறல் போன்றவை இரத்த அழுத்தத்தின் ஒரு சில அறிகுறிகள்.

நமது வாழ்க்கை முறையில் ஒரு சில மாற்றங்களை செய்வதன் மூலமாக இரத்த அழுத்தத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியும். எல்லா ஊட்டச்சத்துக்களும் அடங்கிய பேலன்ஸ்டு டயட்டை சாப்பிடுவதன் மூலமாகவும், சோடியம், சேச்சுரேட்டட் ஃபேட் அல்லது சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்ப்பதன் மூலமாகவும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வரலாம்.

உயர் இரத்த அழுத்தம் என்பது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவாது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பலர் தங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பது தெரியாமலேயே வாழ்கின்றனர். உடல் பருமன் மற்றும் வகை 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படவும், அதன் விளைவாக பக்கவாதம் உண்டாகவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆகவே, உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான அடிப்படை காரணம் என்ன என்பதை அறிந்து அதனை வேரோடு அழிப்பது மிகவும் அவசியம்.

உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் தினமும் ஒரு டீஸ்பூனுக்கும் குறைவான உப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார மையம் அறிவுறுத்துகிறது. சர்க்கரையைத் தவிர, மறைமுகமாக சோடியம் சேர்க்கப்பட்ட பேக்கரி ஐட்டங்கள், ப்ராசஸ் செய்யப்பட்ட சீஸ், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, ரெடிமேட் உணவுகள், பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள், சோடா, சாஸ் போன்றவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். பொதுவாக பேக்கேஜ செய்யப்பட்டுள்ள எல்லா வகையான உணவுகளிலும் சோடியம் ஒரு பிரிசர்வேட்டிவ்வாக பயன்படுத்தப்படுகிறது.

பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுவதால் ஹை BP கொண்ட நபர்கள் இவற்றை தங்களது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பீன்ஸ், பருப்பு வகைகள், பால், தயிர், காட்டேஜ் சீஸ், பெர்ரி பழங்கள், சிட்ரஸ் பழங்கள், இளநீர், பச்சை இலை காய்கறிகள், சியா விதைகள், பாதாம் பருப்பு, பூசணி விதைகள், வால்நட்ஸ் போன்றவற்றில் இந்த தாதுக்கள் அதிக அளவில் காணப்படுகிறது.

அது மட்டுமல்லாமல், இந்த உணவுகளில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதன் காரணமாக இது தமனிகளில் ப்ளேக் உருவாவதை தடுப்பதன் மூலமாக ஹார்ட் அட்டாக் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதை தவிர்க்கிறது.

எல்லா ஊட்டச்சத்துக்களும் அடங்கிய பேலன்ஸ்டு டயட், போதுமான அளவு தண்ணீர் பருகுதல், போதுமான அளவு தூக்கம் பெறுதல், உடற்பயிற்சி போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதும் உயர் இரத்த அழுத்தத்தை தவிக்க உதவும் என கருதப்படுகிறது.

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் சில பழங்கள்: வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் அதிக அளவில் காணப்படுகிறது. இது இரத்த அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது.

ஸ்ட்ராபெரி பழத்தில் காணப்படும் ஒரு ஆன்டி ஆக்சிடன்டான அந்தோசயனின், வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் கொழுப்பு அமிலங்கள் உயர் இரத்த அழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தர்பூசணி பழத்தில் குறைந்த அளவு சோடியமும், அதிக அளவு நீர்ச்சத்தும் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், லைகோபின் மற்றும் பிற ஆன்டி ஆக்சிடன்டுகள் இருப்பதால் இது இரத்த அழுத்தத்தை எதிர்த்து போராடுகிறது.

மாம்பழத்தில் பீட்டா கரோட்டின் மற்றும் பொட்டாசியம் காணப்படுவதால் இப்பழமும் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மாதுளம் பழத்தில் காணப்படும் ACE என்ற நொதி இரத்த நாளங்களின் அளவை கட்டுப்படுத்துவதன் மூலமாக இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

மேற்கண்ட குறிப்புகளின்படி வாழ்க்கை நடைமுறையை மாற்றிக் கொண்டால் நிச்சயமாக உயர் இரத்த அழுத்த பிரச்னையிலிருந்து விலகி ஆரோக்கியமாக வாழலாம்.

அது எப்படி திமிங்கலம், நம்ம கல்லீரல் வெட்டப்பட்டாலும் மீண்டும் வளருது?

குட்டிக் கதை: மகிழ்ச்சியை தக்க வைத்துக் கொள்ள நாம் நாமாக இருக்க வேண்டும்..!

நெற்றிக்கண் கொண்ட நரசிம்மர் கோவில் எங்குள்ளது தெரியுமா?

உலக சிறுவர் கதைகள்: 3 - முட்டாள் என அறியப்படுகிறவன் (துருக்கி நாட்டுப்புறக் கதை)!

தமிழர்களுக்காக உயிரைவிட்ட 'ஆங்கிலேய பாண்டியன்' யார் தெரியுமா? Done mam

SCROLL FOR NEXT