Super Benefits of Zucchini! https://www.ulavaranand.in
ஆரோக்கியம்

சுரைக்காயிலிருக்கும் சூப்பர் நன்மைகள்!

ஜெயகாந்தி மகாதேவன்

‘வின்டர் மெலன்’ என அழைக்கப்படும் நாட்டுக்காய் வகைகளில் ஒன்றான சுரைக்காயில் அடங்கியுள்ள நன்மைகள் ஏராளம்! அவற்றைத் தெரிந்துகொண்டால் ஒவ்வொரு முறை காய் வாங்க கடைக்கு செல்லும்போதும் சுரைக்காய் வாங்காமல் வீடு திரும்ப மாட்டீர்கள். சுரைக்காயின் பயன்கள் என்னென்னவென்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.

உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றத்திற்கு உதவக்கூடிய வைட்டமின்B காம்ப்ளெக்ஸ், வைட்டமின்C மற்றும் பல மினரல்களும் சுரைக்காயில் அதிகளவில் உள்ளன. அவை ஜீரண உறுப்புகள் நல்ல முறையில் வேலை செய்யவும் உதவுகின்றன. அதிகளவு நார்ச்சத்தும் இதில் உள்ளதால் செரிமானப் பிரச்னை ஏதுமின்றி நடைபெறுகிறது.

இந்தக் காய் குறைந்த அளவு கலோரி கொண்டுள்ளதால், எடை குறைப்பில் கவனம் செலுத்துவோர், தடையின்றி உண்ண ஏதுவாகிறது. பொட்டாசியம், அயன் போன்ற கனிமச் சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உடலின் மொத்த ஆரோக்கியத்திற்கும் துணையாகின்றன. கொலஸ்ட்ரால் அளவை சம நிலையில் வைக்கவும், இதயத்தில் உண்டாகும் படபடப்பையும் வலியையும் குறைக்கவும் பயன்படுகின்றன. இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்க உதவுகின்றன.

அதிகளவு ஆன்டி ஆக்சிடன்ட்கள் கொண்டுள்ள சுரைக்காயின் கூட்டுப்பொருள்களான ஃபிளவோனாய்ட் மற்றும் ஃபினோலிக் ஆகியவை ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ்ஸையும், நாள்பட்ட வியாதிகள் வரும் அபாயத்தையும் குறையச் செய்கின்றன. வீக்கத்தை குறைக்கவும் செல்களில் ஏற்படும் சிதைவுகளைத் தடுக்கவும் செய்கின்றன.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து, உடலில் சக்தியின் அளவை உயர்த்தும். வைட்டமின் C யானது இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து உண்பது, அந்த நாள் முழுவதுக்குமான சக்தி கிடைக்க வழியாகிறது. சுரைக்காய் ஜூஸ் அருந்தினால் நமது சருமம் மின்னும். அதிலுள்ள நீர்ச்சத்தானது சரும வறட்சியை நீக்கி, பொலிவுறச் செய்கிறது. இளமைத் தோற்றத்தை தக்க வைக்கும்.

என்னங்க, பை எடுத்துகிட்டு சுரைக்காய் வாங்க கிளம்பிட்டீங்களா? ரொம்ப நல்லது.

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

நுண்கலை போற்றிய நல்லவர்!

“அற்ப மானிடனே, செத்துப் போ” -  பயனரை மோசமாகத் திட்டியதா Gemini AI?

SCROLL FOR NEXT