Superfoods High in Antioxidants https://www.wellcurve.in
ஆரோக்கியம்

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகமுள்ள அற்புத உணவுகள்!

ஜெயகாந்தி மகாதேவன்

ன்டி ஆக்ஸிடன்ட்கள் என்பவை, நம் உடலுக்குள் உருவாகும் தீங்கு விளைவிக்கக்கூடிய ஃபிரிரேடிகல்களை எதிர்த்துப் போராடி கேன்சர், இதய நோய் மற்றும் நாள்பட்ட வியாதிகள் வரும் அபாயத்தைத் தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல் மிக்க பொருட்களாகும். இவை எதிர்மறை விளைவுகளை உண்டுபண்ணக்கூடிய ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸையும் எதிர்த்து வென்று உடல் ஆரோக்கியத்தைக் காக்கக்கூடியவை. ஓர்  இயந்திரம் போல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நம் உடலுக்குள் நோய்த் தடுப்பானாக இருந்தும், சிதைவுற்றிருக்கும் செல்களை சீர்படுத்தவும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உதவி புரிகின்றன. நாம் உண்ண வேண்டிய அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அடங்கிய ஒன்பது உணவு வகைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

அந்தோஸியானின், ஃபிளவனாய்ட், வைட்டமின் C ஆகியவை நிறைந்த பெரி வகைப் பழங்கள்.

லூட்டின்,  ஸியாக்ஸான்தின் (zeaxanthin), வைட்டமின் C ஆகிய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பசலை போன்ற அடர் பச்சை நிறம் கொண்ட கீரைகள்.

வைட்டமின் E, செலினியம், ஃபினோலிக் கூட்டுப்பொருள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த தாவரக் கொட்டைகள் மற்றும் விதைகள்.

ஃபிளவனாய்ட், வைட்டமின் C, பாலிஃபினால்ஸ் ஆகிய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பீன்ஸ்.

பாலிஃபினால்ஸ், ஃபிளவனாய்ட், கேட்டச்சின் ஆகிய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த டார்க் சாக்லேட்.

குறிப்பிட்ட வகை கேட்டச்சின் ஆன எப்பிகல்லோ கேட்டச்சின் கல்லேட் - EGCG (epigallo catechin gallate) என்ற சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த க்ரீன் டீ.

லைக்கோபீன், வைட்டமின் C, பீட்டா கரோட்டீன் ஆகிய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த தக்காளி. பீட்டா கரோட்டீன், வைட்டமின் C, வைட்டமின் E ஆகிய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஸ்வீட் பொட்டேடோ.

சில்லி, மிளகு, மஞ்சள் தூள், லவங்கம், ஏலக்காய், பட்டை  போன்ற மசாலா பொருட்களில் குர்க்குமின் (curcumin) சின்னாமல் டி ஹைடே (cinnamal de hyde) யூஜெனால் (Eugenol) போன்றவற்றில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன.

நோயை எதிர்த்துப் போராடவும், உடலுக்குப் பல நன்மைகள் அளிக்கக்கூடியதுமான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த மேற்கூறிய உணவு வகைகளை நீங்களும் தினமும் உணவில் சேர்த்து உட்கொண்டு ஆரோக்கியம் பெறுங்களேன்!

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT