fingernails 
ஆரோக்கியம்

என்னாது? நகத்த வைச்சு நோயா? நோட் பண்ணணுமே!

சுடர்லெட்சுமி மாரியப்பன்

இளம் தலைமுறையினர் இடையே நகத்தை பராமரிக்கும் பழக்கம் அதிகமாக உள்ளது. ஆனால் நீங்கள் நினைப்பதை போன்று நகத்தை வெட்டி பராமரிப்பது அல்ல, நகத்தை வெட்டாமல் பராமரிப்பதே அவர்களிடையே ட்ரெண்டாக உள்ளது. முக்கியமாக பெண்கள், கையில் நகத்தை வளர்ப்பதோடு அதை சுத்தம் செய்து வண்ண பூச்சுக்களால் அழகுப்படுத்துவர்.

சிலர் இதற்கென காசு கொடுத்து pedicure செய்துக்கொள்வர். ஒவ்வொருவரும் நகங்களை பராமரிப்பது முக்கியமே. அதை விட முக்கியம் என்னவென்றால், தன்னுடைய நகத்தை பற்றி தெரிந்துக் கொண்டு பராமரிக்கின்றோமா? என்பதே. நகங்களில் தானாக தோன்றும் நிறமாறுபாடுகளை பற்றி தெரிந்துக்கொள்வது மிக அவசியம்.

வண்ண வண்ண பூச்சுக்களால் நகங்களை அலங்கரிப்பது தனிப்பட்ட விருப்பமாக இருந்தாலும், தன்னுடைய நகத்தின் நிறத்தை கவனிப்பதில் அலட்சியம் செய்வது பின் விளைவுகளை கொடுக்க நேரிடும். ஏனெனில், நகத்தின் வெளிப்புற நிறத்தை வைத்தே உங்கள் உடலில் உள்ள நோயை கண்டறிய முடியும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உடனே உங்கள் நகத்தை ஆராய தொடங்கிவிட்டீர்களா? முதலில் முழு கட்டுரையும் படித்து, முழு விவரங்களையும் தெரிந்துக்கொள்ளுங்கள்!

நகத்தின் நிறத்தை வைத்து நோயை கண்டறிதல்:

இளஞ்சிவப்பு நிறம்

  • இளஞ்சிவப்பு நிறங்களில் கைவிரல் நகங்கள் இருக்கும்பட்சத்தில் எந்த பயமும் வேண்டியதில்லை. உங்கள் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கிறது என்று அர்த்தம்.

நீல நிறம்

  • நகங்கள் நீல நிறமாக மாறியிருந்தால், ஆஸ்துமா, நுரையீரல் தொடர்பான நோய்களின் அறிகுறியாக கருதப்படுகிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆக்ஸிஜன் அளவு குறைவதும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

  • அதேபோன்று ரத்த ஓட்டத்தில் சிக்கல் இருந்தால், நகங்கள் ஊதா நிறத்தில் மாறலாம்.

மஞ்சள் நிறம்

  • பூஞ்சை தொற்று, நீரிழிவு, கல்லீரல் நோய் உள்ளவர்களுக்கு நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படலாம். 

கருப்பு நிறம்

  • நகங்களின் நிறம் கருப்பாக இருந்தால் கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக நோய், வைட்டமின் B12 பற்றாக்குறை போன்ற பாதிப்புகள் இருக்கலாம்.

வெளிறிய நிறம் 

  • நகங்கள் வெளிறிய நிறத்தில் காணப்பட்டால் உங்களுக்கு ரத்த சோகை இருக்கலாம் என கூறப்படுகிறது.

இது தவிர,

  • உடம்பில் துத்தநாக சத்து குறைபாடு இருத்தால் நகத்தில் வெள்ளை நிறப்புள்ளிகள் தோன்றும்.

  • இதய நோய், நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு கைவிரல் நகங்கள் குவிந்து, தடிமனாகவும், பளபளவென்றும் காணப்படுமாம்.

  • நகங்களில் கோடுகள் அதிகம் தென்பட்டால் நிமோனியா போன்ற தொற்றின் அறிகுறியாக இருக்கலாம்.

  • தரமற்ற மற்றும் அதிகம் ரசாயன கலவை கொண்ட நகப்பூச்சுகளை பூசினாலும் நகங்கள் நிறம் மாற வாய்ப்புள்ளது.

ஆகையால், வண்ண பூச்சுகள் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் நகத்தின் நிறங்களை கவனிப்பதும் அவசியம். நகத்தில் மேற்குறிப்பிட்ட  மாறுபாடுகள் தெரிந்தால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிக மிக அவசியம்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT