நம் நாட்டின் சீதோஷ்ண நிலைக்கு நன்கு வளர்ந்து பலன் கொடுக்கும் வாழை இலை பலவித மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. நம்மில் பலரும் மறந்த வாழை இலையின் பயன்பாடு குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
வாழையிலையில் இருக்கும் chlorophyll மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. இது உணவை விரைவாக செரிமானமடையச் செய்வதுடன் குடல் புண்களையும் ஆற்றுகிறது.
வாழை இலையில் உண்ணும்போது நோய்கள் வராமல் தடுக்கப்படும். பல நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
உணவில் இருக்கும் நச்சுகளும் வாழை இலையில் சாப்பிடுவதால் நீங்கி விடுகின்றன. ஆன்டிபாக்டீரியல் குணம் கொண்டது வாழை இலை.
ஆயுர்வேதத்தில் வாழை இலை குளியல் நச்சு மற்றும் கொழுப்பு நீக்கும் சிகிச்சையாகக் கொடுக்கப்படுகிறது. அரைத்த வாழை இலையை உடலில் தேய்த்துக் குளித்தால் Allantoin மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் சத்து கிடைக்கும்.
முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள், கரும்புள்ளிகள், சரும எரிச்சலை வாழையிலை குணப்படுத்துகிறது. முகப்பரு மற்றும் பருக்களை நீக்கி மேனியை ஈரப்பதத்துடன் மென்மையாக வைக்கிறது.
வாழை இலையில் சாப்பிடுபவர்களுக்கு ஆன்டி ஆக்ஸிடன்டுகன் கிடைப்பதால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இதனால் புற்றுநோய் வரும் அபாயத்தையும் தவிர்க்கலாம்.
இருமல், சுவாசப் பிரச்னைகள், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, முகப்பரு, கல்லீரல் பாதிப்புகள் உள்ளவர்கள் வாழை இலைச் சாற்றை ஜுஸாக குடித்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும். டான்சில் உள்ளவர்களும் வாழை இலைச் சாற்றை ஒரு வேளை அருந்த தொண்டைப் புண் குணமாகும்.
சரும அழற்சி, இரத்த இழப்பு நோய்களும் வாழை இலை பயன்பாட்டால் குணமாக உதவுகிறது. காயங்களில் ஏற்படும் எரிச்சலுக்கு கட்டுப் போட வாழை இலை பயன்படுத்தப்படுகிறது.
வாழையிலைகளை வைத்து கட்டுப் போடுவதால் புண்கள், குறிப்பாக தீக்காயங்கள், கொப்புளங்களுக்கு சிறந்த மருந்தாக விரைவில் ஆற உதவுகிறது. எரிச்சலைத் தணித்து குளிர்ச்சியை உண்டாக்குகிறது.
கடுமையான வயிற்றுப்போக்கு, காய்ச்சல் உள்ளவர்களுக்கு வாழை இலைச் சாற்றை டிகாக் ஷனாக குடிக்கக் கொடுக்க, உடனடி நிவாரணம் கிடைக்கும். Allantoin, poly phenols சத்து கிடைத்து ஊட்டச்சத்து அதிகரிப்பால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
இவ்வாறு பல நன்மைகள் தரும் வாழையிலையை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.