பசும்பாலுக்கு பதிலாக தாவர அடிப்படையிலான மாற்று வகைகளில் தேங்காய் பாலும் ஒன்று. தேங்காயில் மோனோ லாரிக் அமிலம் உள்ளது. இது தேங்காயைத் தவிர, தாய்ப்பாலில் மட்டுமே உள்ள அதிக நன்மைகள் கொண்ட பொருளாகும். மணத்தக்காளி கீரைக்கு பிறகு வயிற்றுப்புண்ணை ஆற்றக்கூடிய சக்தி தேங்காய் பாலுக்கு மட்டுமே உண்டு.
அதிசய பழம்: தேங்காயில் உள்ள ட்ரைகிளிசரைடு என்ற பொருள்தான் குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளின் எடை அதிகரிக்க குழந்தை மருத்துவர்களால் குழந்தைகளின் எடை கூட அளிக்கப்படும் மருந்தாக உள்ளது. தேங்காய் உலகின் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும். இது பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் ஒரு அதிசய பழமாகும். இது ஒரு வகை ஆரோக்கியமான கொழுப்பாகும். இது கல்லீரலால் விரைவாக வளர்சிதை மாற்றம் செய்யப்பட்டு ஆற்றலாக மாற்றப்படுகிறது. அத்துடன் உடலுக்கு சிறந்த எரிபொருளாகவும் அமைகிறது. தேங்காய் சமையல் முதற்கொண்டு அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பது வரை பல விதங்களில் பயன்படுகிறது.
உடல் கொழுப்பையும் எடையையும் குறைக்கும்: தேங்காயில் உள்ள மாங்கனீசு எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது கெட்ட கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக, மலச்சிக்கல், வயிறு உப்புசம், வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை கொண்டது. நார்ச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து அதிகமாக உள்ள தேங்காயில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது. இது நம் இரத்த சர்க்கரையை சீராக்க உதவும். உடலுக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும். தாய்ப்பால் சுரப்புக்கு உதவும். சருமத்தின் அழகைக் கூட்டும் தன்மை கொண்டது. உடல் பருமனை குறைக்கிறது. செரிமானத்திற்கு உதவுகிறது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: தேங்காய் பாலில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தேங்காயில் ஆன்டி ஆக்சிடன்ட்கள், ஆன்ட்டி வைரல், பூஞ்சை காளான் மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகளும் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், தொற்று நோய்களை எதிர்த்து போராடவும் உதவுகிறது.
நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவுகிறது: தேங்காய் நீரில் அதிக அளவு எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. இது உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவும். இளநீர் சுவையானது மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. இளநீர் சிறுநீர் தொற்று ஏற்படுவதின் அபாயத்தை வெகுவாகக் குறைக்கிறது. சிறுநீரகக் கல், பெரியம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்கும் சக்தி கொண்டது.
சருமப் புற்றுநோயை வராமல் தடுக்கிறது: தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் நம் சரும பராமரிப்பு பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றன. சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைத்துக்கொள்ள தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது. இது ஒரு இயற்கையான சரும மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது.
இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை வெகுவாக குறைக்கிறது: தேங்காயில் உள்ள நிறைவுற்ற கொழுப்பு நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. இதில் பொட்டாசியம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இதய நோய் அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை பராமரிக்க தினம் பிரஷ்ஷாக உடைத்த தேங்காயத் துண்டுகளை சிறிது எடுத்துக் கொள்ளலாம்.
கூந்தலை பராமரிக்க உதவுகிறது: முடி உதிர்தல் பிரச்னைக்கு தேங்காய் எண்ணெய் சிகிச்சை அளிக்க சிறந்த தீர்வாக அமைகிறது. தேங்காயில் வைட்டமின் கே மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் தலைமுடியை பளபளப்பாக பராமரிக்க உதவுகிறது. தேங்காய் எண்ணெயில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் பேன், பொடுகு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதுடன், ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.
எலும்பு மற்றும் வயிற்று ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது: தேங்காய்ப் பால் அல்சர் எனப்படும் வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆகியவற்றை குணப்படுத்தும். நாம் உண்ணும் உணவிலிருந்து எலும்பு வளர்ச்சிக்கு உதவும் கால்சியம், மாங்கனீசு போன்ற ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் உடலின் இயற்கையான திறனை தேங்காய் எடுத்துக்கொள்வதன் மூலம் மேம்படுத்துகிறது. ஏழைகளின் குளிர்பானம், நோயாளிகளின் அருமருந்து, சோர்வுற்ற நேரத்தில் ஆற்றல் அளிக்கும் பண்பு நிறைந்த தேங்காய் இயற்கை நமக்களித்த வரப்பிரசாதமாகும்.