மழைக்காலத்தில் சிலருக்கு ஹார்ட் அட்டாக் வரக்கூடும். இதய நோயாளிகளுக்கு ஒத்துப்போகாத காலம் அது. அந்த சமயத்தில் சில உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம்.
மழைக்காலத்தில் பல நோய்கள் பரவக்கூடும். நீர் வழியாக, தொற்றுக்கள், பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் போன்றவை பரவக்கூடும். அப்போது உடல்நலம் பாதிக்கப்படும். அந்த சமயத்தில் இதய நோயாளிகள் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக சில உணவுப்பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
எந்தெந்த உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதைப் பார்ப்போம்.
உப்பு:
உணவின் சுவையை கூட்டிக் கொடுப்பது உப்பு. ஆனால், மழைக்காலத்தில் அதிக உப்பு சேர்த்துக்கொள்வது இதய நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். ஆகையால் உப்பை தவிர்த்துவிடுங்கள். வேண்டுமென்றால், சிறிதளவு உப்பு எடுத்துக்கொள்ளலாம். உப்பு சேர்த்த நட்ஸ் வகைகளையும் தவிர்த்துவிடுங்கள்.
பால் பொருட்கள்:
சாதாரண ஆட்கள் பால் கலந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும்போதே ஒரு மாதிரி வயிறு மந்தமாக இருக்கும். அதுவும் இதய நோயாளிகள் மழைக்காலத்தில் பால் பொருட்களை எடுத்துக்கொள்வது சிரமத்தை எற்படுத்தும். அதிகம் சாப்பிடும்போது இது அட்டாக் வர காரணமாகிவிடும். பால் எடுத்துக்கொள்ளலாம், ஆனால், பாலினால் செய்யப்பட்ட உணவு பொருட்களை தவிர்த்துவிடுங்கள்.
சர்க்கரை:
இதய நோயாளிகள் சர்க்கரை அதிகமாக இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்வது, மேலும் சிரமத்தை ஏற்படுத்தும். ஆகையால், டீ காபி குடிப்பவர்கள், ஸ்வீட் சாப்பிடுபவர்கள் குறைவான சர்க்கரையை எடுத்துக்கொள்ளுங்கள்.குறிப்பாக கடையில் வாங்கும் இனிப்பு பொருட்களை மழைக்காலத்தில் முற்றிலும் தவிர்த்துவிடுங்கள்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி:
பதப்படுத்தப்பட்ட ஆடு, கோழி போன்ற இறைச்சியில் பாக்டீரியாக்கள் வளர அதிக வாய்ப்புகள் இருப்பதால் மழைக்காலத்தில் அதை தவிர்க்க வேண்டும். ஈரப்பதம் காரணமாகத்தான் பாக்டீரியா வளரும்.
பக்கோடா:
எண்ணெயில் ஆழமாக வறுத்த நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவை கொழுப்பு மற்றும் அதிக கலோரிகள் நிறைந்தவை. இது எல்டிஎல் அளவை குறைத்து உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். பருவமழை நமது நோயெதிர்ப்பு சக்தியை பாதிக்கலாம். இந்நிலையில் இந்த எண்ணெய் மிகுந்த பக்கோடா, பஜ்ஜி, போண்டா போன்றவை உடல் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.