oxygen foods https://www.healthshots.com
ஆரோக்கியம்

உடலில் ஆக்ஸிஜன் அளவு குறையாமல் இருக்க இந்த 7 உணவுகள் அவசியம்!

ஜெயகாந்தி மகாதேவன்

ம் உடல் உயிர்ப்புடன் இருக்க ஆக்ஸிஜனின் மிக மிக அவசியம். இதை நம் உடல் வெளிக்காற்றை மூக்கின் வழியே சுவாசித்து உள்ளே செலுத்தும்போது உடல் ஆக்ஸிஜனை நுரையீரல் மூலம் பெற்றுக்கொள்கிறது. பின் இது இரத்தத்தின் சிவப்பு அணுக்களில் உள்ள ஹீமோக்ளோபின் என்ற புரதத்தின் மூலம் உடலின் எல்லா பாகங்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. ஆக்ஸிஜன், அநேகமாக  எல்லா உயிரினங்களும் உயிர் வாழவும், வளர்ச்சி அடையவும், இனவிருத்தி செய்யவும், உண்ணும் உணவுகளை சக்தியாக மாற்றி உடல் உறுப்புகள் செயலாற்ற வழங்கவும் உதவி புரிகிறது.

நம் உடலுக்குள் செல்லும் ஆக்ஸிஜன் அளவு குறையும்போது மயக்கம், பலவீனம், குழப்பம், குமட்டல், உறுப்புகளுக்கிடையே ஒத்துழைப்பின்மை போன்ற கோளாறுகள் எல்லாம் தோன்றும். மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவு குறையும்போது செரிபிரல் ஹைப்போக்சியா (Cerebral Hypoxia) நிலை ஏற்பட்டு மூளை முழுவதுமாக செயல் இழக்கும். தொடர்ந்து இதயமும் பாதிக்கப்படும்போது இறக்கும் நிலைக்கு உடல் சென்றுவிடும். எனவே, நம் உடல் போதுமான அளவு ஆக்ஸிஜன் பெற்று ஆரோக்கியத்துடன் செயல்பட ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும். சில வகை உணவுகளையும் நாம் உண்ணும் உணவுடன் சேர்த்து உட்கொண்டு சிறப்பான ஆரோக்கியம் பெறுவோம். அவ்வாறான உணவுகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. மஞ்சள்: இது நைட்ரிக் ஆக்ஸைடின் அளவை அதிகரிக்கச் செய்யும். இதனால் எல்லா உறுப்புகளுக்கும் சம அளவில் இரத்தம் சென்று அடையும்.

2. பெரி: பெரி பழங்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன. குறிப்பாக ஃபிளவனாய்ட்கள் அதிகம்.

3. லெமன்: இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கச் செய்யும் சிறந்த உணவு லெமன்.

4. அவகோடா: இப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் லூட்டின் சத்துக்கள் மிக அதிகம்.

5. பச்சை இலைக் காய்கறிகள்: பசலை, காலே, சுவிஸ் சார்ட் போன்ற பச்சை இலைக் காய்கறிகளில் உள்ள குளோரஃபில் இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கவும் திசுக்கள் மற்றும் அனைத்து உறுப்புகளும் சரியான அளவு ஆக்ஸிஜன் பெறவும் உதவும்.

6. கிரேப்ஸ்: இப்பழத்தில் உள்ள அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடல் முழுவதும் ஆக்ஸிஜன் சென்றடைய சிறந்த முறையில் உதவி புரியும்.

7. பாதாம் பருப்புகள்: இவற்றில் உள்ள அதிகளவு வைட்டமின் E மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு உயர உதவும்.

மேலே கூறிய 7 வகை உணவுகளுமே இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவுபவை. இவற்றை நாமும் அடிக்கடி உட்கொண்டு நலம் பெறுவோம்.

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

மைக்ரோ கீரைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு? சாகுபடி முறை இதோ!

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

SCROLL FOR NEXT