Fat loss Foods 
ஆரோக்கியம்

கொழுப்பைக் குறைக்கும் டாப் 5 உணவுகள் இவைதான்!

கிரி கணபதி

இன்றைய காலத்தில் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறை முற்றிலும் மோசமாக மாறிவிட்டது. இதனால் உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்து உடல் எடையை எக்குத்தப்பாகக் கூட்டி விடுகிறது. என்னதான் உடற்பயிற்சி செய்தாலும் இந்த கொழுப்பு, உடலை விட்டு போவதில்லை. எனவே உங்களது உணவு முறையை மாற்றி, கொழுப்பைக் குறைக்கும் முயற்சியில் இப்போதே இறங்குங்கள். உங்கள் உடலில் உள்ள கெட்ட விஷயங்களை நீக்கி ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டிய நேரம் இது. சரி வாருங்கள் இந்த பதிவில் உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் 5 உணவுகள் என்னவெனப் பார்க்கலாம்.

வெந்தயம்: கொழுப்பைக் குறைக்கும் ஒரு சூப்பர் பொருள் எதுவென்றால் அது வெந்தயம்தான். வெந்தயம் ஒரு நவீன நன்மைகளைக் கொடுக்கும் பழங்கால மசாலாப் பொருளாகும். இது உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து செரிமான அமைப்பு மேம்பட உதவுகிறது.

பூண்டு: இது நம் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி, இரத்த ஓட்டத்தை சீராக்கி இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது. பூண்டு சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது.

மஞ்சள்: மஞ்சளில் குர்குமின் என்ற ரசாயனம் உள்ளது. இது ஒரு இயற்கையான இதய பாதுகாப்புப் பொருளாகும். மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் இருப்பதால், மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும்.

ஓட்ஸ்: உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் ஒரு சாம்பியன் யார் என்றால், அது ஓட்ஸ் உணவு மட்டுமே. உங்களது ஒவ்வொரு நாளையும் ஓட்ஸ் உணவு சாப்பிட்டுத் தொடங்குவது நல்லது. இதில் அதிகப்படியான நார்ச்சத்து இருப்பதால் கெட்ட கொழுப்பை நீக்க உதவுகிறது.

நட்ஸ்: உடல் எடையை பராமரிக்க தினசரி நட்ஸ் சாப்பிட வேண்டியது அவசியம். குறிப்பாக இவற்றை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்வது நல்லது. இதில் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புகள் இருப்பதால், கெட்ட கொழுப்புகளை விரைவாகக் குறைக்க உதவும்.

இந்த ஐந்து உணவுகளை உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் கட்டாயம் எடுத்துக் கொள்வது அவசியம். உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால் அது தீவிர பிரச்சனைகளை ஏற்படுத்தி, மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும். எனவே எதுபோன்ற உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள். முடிந்தவரை நொறுக்குத் தீனிகளை நிறுத்திவிட்டு, ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு மகிழ்ச்சியாக இருங்கள்.

இத்துடன் உங்களது தினசரி வழக்கத்தில் உடற்பயிற்சியை சேர்ப்பது மூலமாக, உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளை மேலும் வேகமாகக் குறைக்க முடியும்.

"பயிற்சி செய் அல்லது செத்து மடி": ப்ரூஸ் லீயின் அறிவுரை!

Spider Man கதாபாத்திரத்தின் தலைசிறந்த 10 ஊக்கமூட்டும் பொன்மொழிகள்! 

Direct-to-Cell செயற்கைக்கோள் இணைப்பு: புதிய யுகத்தின் தொடக்கம்! 

உங்கள் வீட்டில் சிறிய குழந்தைகள் இருக்கிறதா? அப்படியென்றால் இதுபோன்ற செடிகளை வளர்க்காதீர்கள்!

திருக்கண்ணபுரம் முனையதரையன் பொங்கல் பிரசாதம் உருவான வரலாறு!

SCROLL FOR NEXT