Useful tips to fall asleep after lying down 
ஆரோக்கியம்

படுத்தவுடன் தூக்கம் கண்களைத் தழுவ பயனுள்ள ஆலோசனைகள்!

சேலம் சுபா

நீண்ட கால தூக்கமின்மை பிரச்னை நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோய்கள், வாதம் ஆகிய உடல் பாதிப்புகளை உருவாக்கும் என்பதால் அவசியம் உடல் நலனுக்கு தேவையான தூக்கத்தை அவசியம் பெற வேண்டும். படுக்கையில் சாய்ந்தவுடன் தூக்கம் உங்கள் கண்களைத் தழுவ பயனுள்ள ஆலோசனைகளை இந்தப் பதிவில் காண்போம்.

1. உணவுக்கும் தூக்கத்துக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஒரு மனிதனுக்கு எட்டு மணி நேரம் உறக்கம் என்பது மிகவும் அவசியம். அதன் முன்பு உணவு எடுப்பதிலும் கவனம் தேவை.

2. இரவு உணவிற்கும் தூக்கத்துக்கும் இடையில் இரண்டு மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும். இதன் மூலம் நாம் தூங்குவதற்கு முன்பாகவே பாதி உணவு ஜீரணம் ஆகிவிடும். அதனால் வயிற்றுப் பகுதியில் சுமை குறைந்து இருப்பதால் நிம்மதியான உறக்கம் நிச்சயம்.

3. இரவு நேரங்களில் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை தவிர்ப்பது மிகவும் முக்கியம். நூடுல்ஸ், ராஜ்மா, பரோட்டா, சன்னா போன்ற உணவுகளை எடுத்தால் செரிமானத்தை பாதித்து தூக்கத்தையும் கெடுக்கும்.

4. கார்போஹைட்ரேட் மற்றும் புரதச்சத்து கலந்த உணவுகளை இரவில் எடுத்துக்கொள்வது சிறந்தது. இட்லி தோசை சாம்பார் சட்னி போன்றவை இரவுக்கு சிறந்த உணவுகள்.

5. சிலர் டயட் என்ற பெயரில் பழங்களை மட்டும் எடுத்துக்கொள்வதும் தவறு. பழங்களில் உள்ள அமிலங்கள் எளிதில் பசியைத் தூண்டும். இதனாலும் இரவு தூக்கம் பாதிக்கப்படும்.

6. இரவு சாப்பிட்டவுடன் கடினமான உடற்பயிற்சி செய்வது தவறு. பத்து நிமிடங்கள் மிதமான நடைப்பயிற்சி செய்யலாம் . இது நீரிழிவு  நோயாளிகளுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் நலம் தரும்.

7. சர்க்கரை பாதிப்பை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் உணவு செரித்து நல்ல தூக்கம் கிடைக்கும். இரவுகளில் குளுக்கோஸ் உள்ள பால், சாதம் போன்றவற்றை இவர்கள் தவிர்க்க வேண்டும்.

8. தாமதமாக உண்ணுதல், செல்போன் மற்றும் தொலைக்காட்சி பார்ப்பதை இரவு 9 மணிக்கு மேல் தவிர்க்க வேண்டும். அவற்றின் கதிர்கள் மற்றும் வெளிச்சம்  தூக்கத்தைக் கெடுக்கும். மேலும், அதில் காணும் காட்சிகளால் மனம் அலைபாய்ந்து தூக்கத்தைத் தடுக்கும்.

9. நேர்மறை எண்ணம் நிம்மதியான உறக்கத்திற்கு அடிப்படை. எதிர்காலம் குறித்த கவலை இருந்தால் மன அழுத்தம் அதிகரிக்கும். நடந்தது, நடக்க இருப்பது இப்படி எதையும் நினைக்காமல் இருந்தாலே படுத்தவுடன் உறக்கம் வரும்.

10. இரவில் தூக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்கள் மதிய உறக்கத்தைத் தவிர்ப்பது நல்லது. பகலில் தூங்கி பழகினால் இரவில் தூக்கம் தாமதமாகும். தூக்கமின்மை காரணமாக உடல் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாவதோடு மனநலம் சார்ந்த பிரச்னைகளும் ஏற்படலாம்.

11. இனிமையான இசையை கேட்பது நம் மனதை அமைதிப்படுத்தும். தூக்கத்தை வர வைப்பதற்கு என்றே மென்மையான இசையுடன் ‘ஸ்லீப் மியூசிக், ரிலாக்ஸேஷன் மியூசிக்’ என்ற பெயர்களுடன் சிறப்பான இசை ஆல்பங்கள் உள்ளன.

12. தியானம் செய்வதும் ஆழ்ந்த உறக்கத்திற்கு நல்லது. தியானம் கார்டிசால் எனப்படும் பதற்றம் தரும் ஹார்மோனை குறைக்கும். தூக்கத்துக்கு அவசியமான மெலடோனினை அதிகப்படுத்தும். ஆகவே 10 அல்லது 15 நிமிடங்கள் தியான வழிமுறைகளின்படி மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்யுங்கள்.

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

SCROLL FOR NEXT