Valmilagu https://tamil.webdunia.com
ஆரோக்கியம்

வால்மிளகின் வியக்கவைக்கும் ஆரோக்கியப் பலன்கள் தெரியுமா?

ஆர்.பிரசன்னா

வால்மிளகு, கறிவேப்பிலைப் பொடி, லவங்கம், கடுக்காய், நெல்லி வற்றல் சேர்த்துத் தயாரித்த பல்பொடியில் பல் துலக்கினால் பல் சொத்தை, பல் ஈறு வீக்கம், பல்லில் இரத்தம் வடிதல் ஆகிய பிரச்னைகள் குணமாகும்.

சிறு குறிஞ்சான் இலையை உலர்த்தி சூரணம் செய்து பத்தில் ஒரு பங்கு வால்மிளகுத்தூள் சேர்த்து 5 கிராம் தேனில் சாப்பிட நீரிழிவு நோய் முற்றிலும் குணமடையும்.

வால்மிளகை பொடி செய்து இளநீரில் கலந்து குடித்தால் வயிற்றில் ஏற்படும் சூடு பிரச்னை சரிசெய்யும்.

தலைவலி இருந்தால் வால்மிளகை பன்னீரில் அரைத்து நெற்றியில் பற்று  போட்டு வந்தால் தலைவலி குறையும்.

பசும்பாலில் வால்மிளகை ஊற வைத்து அதில் பீர்க்காங்காய்  பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால்  உடல் சூடு, சிறுநீர் எரிச்சல் குறையும்.

சமையலில் வால்மிளகை அடிக்கடி சேர்த்து வந்தால், வயிற்றில் இருக்கும் புழுக்கள் வெளியேறி விடும்.

சந்தனப் பொடி, வால்மிளகு, அதிமதுரம் ஆகிய மூன்றையும் காய்ச்சி மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் கல் அடைப்பு மற்றும் சிறுநீர் பிரச்னை குணமாகும்.

ஒரு கப் தண்ணீரில் சிறிய இலவங்கப்பட்டை ஒன்று எடுத்து அதனுடன் கால் ஸ்பூன் அரைத்த வால்மிளகு சேர்த்து கொதிக்க வைத்து வாய் கொப்புளித்து வந்தால் வாய் துர்நாற்றம் விலகும்.

வால்மிளகை சுட்டு, அதில் வரும் புகையை சுவாசித்தால் ஆஸ்துமா பிரச்னை குணமாகும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT